முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி!

வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் களமிறங்கும் 11 வேட்பாளர்களின் பெயரினை கட்சி தலைமை அறவித்துள்ளது!

Last Updated : Mar 22, 2019, 03:17 PM IST
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி! title=

வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் களமிறங்கும் 11 வேட்பாளர்களின் பெயரினை கட்சி தலைமை அறவித்துள்ளது!

சமீபத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த குன்வர் டேனிஷ் அலி-க்கு அம்ரோஹா தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ருச்சி வீரா-விற்கு அனோலா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

---பகுஜன் சமாஜ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்(உத்திர பிரதேசம்)---

  • ஹாஜி ஃபேஜ்லர் ரஹ்மான்: சஹரன்பூர்
  • மாலுக் நகர்: பிஜ்னாவ்ர்
  • கிரிஷ் சந்திரா: நாகினா
  • குன்வர் டேனிஷ் அலி: அம்ரோஹா
  • ஹாஜி முகமது யாகூப்: மீரட்
  • சத்பீர் நகர்: கௌதம்பூட்நகர்
  • யோகேஷ் வர்மா: புளந்த்ஷாஹர்
  • அஜித் பாலியன்: அலிகத்
  • மனோஜ் குமார் சோனி: ஆக்ரா
  • ராஜ்வீர் சிங்: ஃபதேபூர் சிக்ரி
  • ருச்சி வீரா: அனோலா

முன்னதாக இன்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் 20 பேர் பெயர் கொண்ட பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டது. இந்த பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி அவர்களின் மருமகன் ஆகாஷ் ஆனாந்த் இடம்பெற்றிருந்தார். சமீப காலமகாக மாயாவதி உடன் பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்ட இவர் கட்சி தலைமைக்கும் - இளைஞர் சமூதாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாய் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது.

இவரை தவிர இப்பட்டியலில் இடம்பிடித்த நம்பிக்கை நட்சத்திரங்கள்... மாயாவதி, சதீஷ் சந்திரா மிஷ்ரா, குஷ்வாஹா, ராஜ் குமார் கௌதம், நரேஷ் கௌதம், சம்சுதின் ரெயின், கமல் சிங் ராஜ், முராரி லால் கெயின், தினேஷ் கஜிப்பூர், ராஜிவ் சிங் மற்றும் ஜெனிஷ்வர் பிரசாத் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

மேலம் வரும் மக்களவை தேர்தலி தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த மாயாவதி, தம் கட்சி வெற்றிக்காக தொண்டர்கள் ஐயராது உழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News