வரலாறு காணாத சரிவை கண்ட பகுஜன் சமாஜ் கட்சி! தோல்வியடைந்ததா மாயாவதியின் உக்தி?

பகுஜன் சமாஜ் கட்சி மாபெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என தேர்தல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2022, 03:14 PM IST
  • மாயாவதி தனது தேர்தல் பின்னடைவுகளுக்கு வாக்காளர்களைக் குறை கூறுவது இது முதல் முறையல்ல.
  • 2022 இல், பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.
வரலாறு காணாத சரிவை கண்ட பகுஜன் சமாஜ் கட்சி! தோல்வியடைந்ததா மாயாவதியின் உக்தி? title=

அண்மையில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் முன்னணி கட்சியாக இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் பொருப்பில் இயங்கும் சமஜ்வாதி கட்சியிடம் படுதோல்வியடைந்தது.

சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாயாவதி, உத்தரப்பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கான காரணங்களை விளக்கி கூறினார்.

அப்போது அவர், தனும் தனது வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்ததிற்கு தங்களது ஆதரவாளர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த முஸ்லீம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை அவர் குற்றம் சாட்டினார். 

மாயாவதி தனது தேர்தல் பின்னடைவுகளுக்கு வாக்காளர்களைக் குறை கூறுவது இது முதல் முறையல்ல. 2012 இலும் இதேபோல், முஸ்லிம் வாக்காளர்கள் தனது சமாஜ்வாதி கட்சியை ஆதரித்ததால்தான் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று அவர் விமர்சித்திருந்தார்.

ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தாங்கள் விரும்பியவருக்கு வாக்களிக்க சுதந்திரம் உண்டு. இருந்தாலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இவ்வளவு வாக்காளர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை கைவிட்டனர் என்பது குறித்து நாம் ஆராயவேண்டும்.

உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் மற்றும், பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சியிலிருந்து தற்போதைய அரசியல் களத்திற்கு தேவையான  ஒரு முக்கிய விஷயத்தை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. 

அது என்னவென்றால், பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை கடைப்பிடித்து வரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் உக்தியுடைய தோல்வியைதான் இந்த வீழ்ச்சி உணர்த்துகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சரிவு:

அப்படி என்ன இந்த 2022ல் நடத்தது என்று பார்ப்போம்.

2007 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 30.4% வாக்குகளுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை (403 இடங்களில் 206) வென்றது.

2012 இல் பகுஜன் சமாஜ் கட்சி 25.9% வாக்குகளுடன் 80 இடங்களைக் கைப்பற்றியது. 2017 இல், அது 22.2% வாக்குகளைப் பெற்று 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2017 தேர்தலுக்குப் பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி கீழ் மட்டத்திற்கு சரிந்து விட்டதாகவே பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் தேர்தல் நிபுணர்கள் கருதினர்.

இருப்பினும், 2022 இல், பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. அதாவது 12.9% ஆகக் வாக்கு சதவீதம் குறைந்தது. இவ்வாறு இக் கட்சியானது பல்லியா மாவட்டத்தில் உள்ள ரஸ்ராவில் ஒரே ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டது என்பது சரிவின் உச்சம் தானே?

மேலும் படிக்க | நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்?

பணம், ஆட்பலம் மற்றும் ஜாதி:

பகுஜன் சமாஜ் கட்சி  நிறுவப்பட்ட 1984 ஆம் ஆண்டு முதலே, அரசியல் களத்தில் காலூண்றி நிற்பதற்கு, தற்காலிக ஜாதி அடிப்படையிலான கூட்டணிகளையே பெரிதும் நம்பி இருந்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஜாதியை பொருத்தவரை தலித்து மக்கள், சிறுபான்மை சமூகத்தினர் என்ற குறைந்த பட்ச மக்களையே பகுஜன் சமாஜ் கட்சி குறிவைத்திருந்தது. அவர்களுக்கான கட்சி என்று மார்தட்டிக்கொண்டு உயர் மற்றும் இடைநிலை ஜாதியினரிடமிருந்து ஆதரவை எதிர்ப்பார்ப்பது எப்படி வெற்றியை அடைய உதவும்? என நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.

அதேபோல் தேர்தலில் பெரும்பாலும் போட்டியாளர்களாகவும் சிறுபான்மையினரையே நிற்க வைத்தது பகுஜன் சமாஜ் கட்சி. அதுவும் உத்தர பிரதேசத்தில் சிறுபான்மை சமூக மக்களின் சதவிதமானது 20% மட்டுமே என்பதால் வெற்றி பெருவதன் சாத்தியகூறு வீழ்ச்சி கண்டதில் ஆச்சரியமில்லை எனவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவையணைத்தையும் தவிர மேலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அது என்னவென்றால் தேர்தல் வேட்பாளர் பணத்தின் அளவு கொண்டு தீர்மாணிக்கப்படுகின்றனர். பணம் தருபவர்களுக்கு சீட்டு. சில நேரங்களில் பல பணக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை வேண்டும் கேட்டால், அந்த இடத்தில் போட்டியிடுவதற்கு ஏலம் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த செயல் தேர்தல் நேர பணச் செலவை கையாள உதவுமே தவிர, வெற்றியைப் பெற உதவாது என்பதை அடுத்தடுத்த தோல்விகள் கற்றுக்கொடுத்திருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News