பாஜக சார்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. தமிழிசை, எல்.முருகன், கே.அண்ணாமலை......

Lok Sabha Election 2024: லோக்சபா தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2024, 07:07 PM IST
பாஜக சார்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. தமிழிசை, எல்.முருகன், கே.அண்ணாமலை...... title=

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அதில் தமிழக பாஜகவை சேர்ந்த 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எல்.முருகன் நீலகிரியிலும், கே.அண்ணாமலை கோவையிலும், பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும் போட்டியிடுவார்கள்.

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

தென் சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை-  வினோஜ் பி செல்வம்
வேலூர் - ஏ.சி. சண்முகம்
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன் 
கோவை - கே.அண்ணாமலை
பெரம்பலூர் - டி. ஆர். பாரிவேந்தன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - நயினார் நாகராஜன்

Bharatiya Janata Party Releases Candidates List

 

வேட்பாளரின் தொகுதி மாற்றம்

நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருநெல்வேலியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க - பாஜக 20 தொகுதிகளில் நேரடி போட்டி... அண்ணாமலை அறிவிப்பு - ஓபிஎஸ் அணிக்கு கல்தா!

இரண்டாவது வேட்பாளர் பட்டியல்

பாஜக வெளியிட்ட இரண்டாது வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் மனோகர் லால் கட்டார், திரிவேந்திர சிங் ராவத் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான அனில் பலுனி உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் தொகுதியில் போட்டியிடுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டது.

முதல் வேட்பாளர் பட்டியல்

பாஜக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து 51, மேற்கு வங்கத்தில் 20, மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9 இடங்கள், அஸ்ஸாமில் இருந்து 11 இடங்களுக்கு, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து தலா 11, டெல்லியில் இருந்து 5, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 2, உத்தரகாண்டில் இருந்து 3, அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 2 மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் டாமன் மற்றும் டையூவில் இருந்து தலா ஒருவர் என முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவாடே அறிவித்தார்.

மக்களவைத் தேர்தல் எப்பொழுது?

நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரத்தில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மோடி தலைமையிலான பாஜக அரசை, இந்தமுறை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் சந்திக்கவுள்ளனர்.

மேலும் படிக்க - முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல்... பாஜகவுக்கு சாதகமா? - சந்தேகத்தை கிளப்பும் தலைவர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News