Lok Sabha Election 2024 Date Announcement: இந்திய மக்களுக்கு இந்தாண்டு கோடை காலம் சற்று ஸ்பெஷல்தான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது கடைசி ஐபிஎல் சீசனை இந்தாண்டுதான் விளையாடப்போகிறார். மேலும், மும்பை இந்தியன்ஸில் கேப்டன்ஸி மாற்றம், ஒவ்வொரு அணிகளுக்குள் வந்திருக்கும் புதிய வீரர்கள் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் (IPL 2024) சற்றே வித்தியசமாக தொடங்க இருக்கிறது.
அதேபோல், மக்களவை தேர்தலும் இந்த கோடை காலத்தில்தான் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தற்போதே பல வழிகளில் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன. இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தொடர்கிறார் எனலாம். மறுபுறம் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியின் குழப்பங்களும், கூட்டங்களும் மாறி மாறி அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன.
ஐபிஎல் தொடரும், மக்களவை தேர்தலும்...
எனவே, இந்திய மக்கள் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியையும், ஐபிஎல் அட்டவணைனையையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஐபிஎல் தொடரின் அட்டவணை முதல் கட்டமாக 21 போட்டிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடங்க இருக்கிறது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஐபிஎல் தொடரின் மற்ற போட்டிகளின் அட்டவணையும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில், தற்போது அனைவரின் கவனமும் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து திரும்பி உள்ளது. எப்போது மக்களவை தேர்தல் தேதி, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என மக்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி மற்றும் அனைத்து அட்டவணையும் வரும் மார்ச் 13ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவை தேதி அறிவிப்பு எப்போது?
தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணைய அலுவலர்கள் பல மாநிலங்களுக்கு சென்று தேர்தல் நடத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் உத்தர பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை மீதம் இருப்பதாகவும், அங்கு ஆய்வுகளை நிறைவு செய்த உடன் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் 13ஆம் தேதியோடு இந்த ஆய்வுகள் நிறைவு பெற இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே தேர்தல் அதிகாரிகள் அனைத்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டு, தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நெருக்கடி மிகுந்த பகுதிகள், பாதுகாப்பு படையினரின் தேவை உள்ளிட்ட பல விஷயங்களை தேர்தல் ஆணையத்திடம், அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடந்த 2019 மக்களவை தேர்தல்...
மேலும், வரும் மக்களவை தேர்தலில், போலியான தகவல்கள் மற்றும் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க தேர்தல் ஆணையம் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 543 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற கடந்த 2019 தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மே 23ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குறிப்பாக, மார்ச் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ