ரூ. 2000 நோட்டை மாற்ற தேதி நீட்டிப்பு... ஆனால் ஆர்பிஐ வைச்ச ட்விஸ்ட் - என்ன தெரியுமா?

RBI On Rs 2000 Notes: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2023, 06:05 PM IST
ரூ. 2000 நோட்டை மாற்ற தேதி நீட்டிப்பு... ஆனால் ஆர்பிஐ வைச்ச ட்விஸ்ட் - என்ன தெரியுமா? title=

RBI On Rs 2000 Notes: 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதனை வங்கியில் மாற்றிக் கொள்ளுமாறும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது. மேலும், அதற்கான கடைசி தேதியாக செப். 30ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. செப். 30ஆம் தேதியான இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ இன்று வெளியிட்ட X பதிவில்,"ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததால்,  தற்போது மறுஆய்வின் அடிப்படையில், ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், அதனை மாற்றுவதற்கான தற்போதைய ஏற்பாட்டை வரும் அக்டோபர் 07ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் அதிரடியாக மாறிய தங்கம் விலை!

கடந்த மே 19ஆம் தேதி முதல் பொதுமக்கள் ரூ.3.42 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை வங்கிக்கு திருப்பி கொடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகள் அனைத்தும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை வங்கிக் கிளைகளில் டெபாசிட் மற்றும் வங்கியில் மாற்றப்பட்டவை ஆகும். மேலும் இந்தாண்டு மே 19ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 96 சதவீத ரூ. 2000 நோட்டுகளாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்துள்ளது.

வங்கிகளில் மாற்ற முடியாது

ரூ.2,000 நோட்டுகள் அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகும் செல்லாது. ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே மாற்ற முடியும். அவற்றை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பல இ-காமர்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்து கழகங்கள் ரூ. 2000 நோட்டை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்தி உள்ளதால் தற்போதும் அதே நிலை தொடரவே அதிக வாய்ப்புள்ளது. வங்கிகளில் முன்னர் போன்று எளிமையாக டெபாசிட் செய்துக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ முடியாத காரணத்தால் பிறரும் ரூ. 2000 நோட்டை வாங்குவது கடினம்தான் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பாஜக எம்பி மேனகா காந்திக்கு 100 கோடி ரூபாய் அவதூறு நோட்டீஸ் அனுப்பிய இஸ்கான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News