கொலைப்பசி... பூனையை பச்சையாக சாப்பிட்ட நபர்... மருத்துவமனையில் அனுமதி

Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2024, 03:45 PM IST
  • அந்த நபர் நான்கு நாள்களாக சாப்பிடவில்லை என மக்களிடம் கூறியுள்ளார்.
  • அவரின் உடையும் சீராகவே இருந்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
  • அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலைப்பசி... பூனையை பச்சையாக சாப்பிட்ட நபர்... மருத்துவமனையில் அனுமதி  title=

Cat Raw Meat Eater In Kerala: கேரளம் மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள குட்டிபுரம் பஸ் நிலையத்தில் ஒரு நபர் பூனையின் உடல் பாகங்களை பச்சையாக சாப்பிட்டு வந்ததை சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அந்த நபரை விசாரித்துள்ளனர். 

அப்போது அந்த நபர் தனக்கு மிகவும் பசி எடுப்பதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு போலீசார் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, அவர் நான்கு நாள்களாக சாப்பிடவில்லை எனவும் பொதுமக்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. 

பூனையை பச்சையாக சாப்பிட்ட நபர்

சுத்தமாக, சட்டையிலேயோ  இல்லை உடலிலேயோ எவ்வித அழுக்கும் இன்று ஒரு நபர் ஒரு பொட்டலத்தில் இருந்து உணவு சாப்பிடுவதை அருகில் இருந்து கடைக்காரர் பார்த்துள்ளார். அந்த பொட்டலத்தில் இருந்து துர்நாற்றம் அடித்த நிலையில், அந்த நபர் என்ன சாப்பிடுகிறார் என்பதை அந்த கடைக்காரர் பார்த்துள்ளார். அப்போதுதான், அவர் பூனையின் உடற்பாகங்களை பச்சையாக சாப்பிடுவதை கண்டுபிடித்துள்ளார். 

மேலும் படிக்க | ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

உடனே அந்த கடைக்காரர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் தெரிவிக்கப்பட்ட சனிக்கிழமை மாலையில் குட்டிபுரம் காவல் ஆய்வாளர் பி.கே. பத்மராஜன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும், அந்த நபர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். பின்னர், அடுத்த நாள் (ஞாயிறு) காலை குட்டிபுரம் ரயில் நிலையம் அருகே அந்த நபரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

விசாரணையில் அவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. குறிப்பாக, அந்த நபர் அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. மேலும், குட்டிபுரம் தாலுகா மருத்துவமனையில் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது. இதனால், அவரை போலீசார் கோழிக்கோடு அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எதற்கு கோழிக்கோடு வந்தார்...?

இந்த நபர் சென்னையில் இருந்து தனது சகோதரர் இருக்கும் கேரளம் மாநிலம் கோழிக்கோடு நகரத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்த நபரின் சகோததர், தனது தம்பியை காணவில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதன்பின்னரே, தீவிர விசாரணை மற்றும் மருத்துவ சோதனைக்கு பின் மனநல மருத்துவமனையில் போலீசார் அவரை சேர்த்துள்ளனர்.

பூனையை கறியை பச்சையாக அவர் சாப்பிட்டதை பலரும் பார்த்த பின்னரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், போலீசாரால் அன்றைய தினமே அந்த நபரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதன்மூலம், பச்சையாக பூனையை சாப்பிட்டதால் அவரின் உடல்நிலைக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | இந்து மதத்தை தாக்கிய இஸ்லாமிய மதகுரு கைது! மும்பை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News