கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting :  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தற்போதைய நிலையில் உள்ளனர்.   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 5, 2024, 06:36 PM IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
  • கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு
  • கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
கடிவாளம் போடும்  நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக? title=

NDA Meeting : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, பாஜக கட்சி, 240 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இதில், பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்த தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டம் இன்று டெல்லியில் நடைப்பெற்றது. இதில், ஆந்திராவின் புதிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாருக்கு ஆதரவு தெரிவிப்பர் என்பதும், அவர்கள் யாரை கைக்காட்ட போகிறார்கள் என்பதும் முக்கிய விஷயமாக கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று டெல்லி கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகப்போவது இல்லை என்று தெரிவித்தார். 

தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் உள்ளனர். 
இவர்கள் இருவரும் மீண்டும் டெல்லிக்கு வருவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆந்திராவில் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கிறார் சந்திரபாபு நாயுடு அந்த பணிகள் அவருக்கு நிறைய இருக்கிறது.

 

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை பொறுத்தவரை இந்த தேர்தல் காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் என்பது நிறைய இருக்கிறது. அது குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால்  இன்று இந்த இருவர்களையும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் ஜனாதிபதி மாளிகை சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்த கடிதத்தை கொடுக்க இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 

மற்றொரு காரணம் நேற்றிலிருந்து இந்திய கூட்டணி தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களுடனும் மற்ற கட்சியினரிடம் பேச முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது இன்று இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டமும் தற்போது டெல்லியில் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் வேறு ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முன்பாக ஆட்சி அமைக்க கோரலாம் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்

தேசிய ஜனனாய் கூட்டணி கட்சிகளிடம் ஆட்சி அமைக்க முதலில் கடிதம் கொடுப்போம் பின்பு யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்ன பதவிகள் என்பது பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என பாஜக உறுதி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

பிரதான கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில்லாமல் பாஜக ஆட்சி அமைப்பது என்பது ஆட்சியை தொடர்வது என்பது முடியாத காரியம் என்பதால் இந்த இருவரும் இதற்கு தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை பாஜகவுக்கு உள்ளதால் பாஜகவும் இவர்களுடைய கோரிக்கையை பின்பு நிறைவேற்றும் என சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | உத்தர பிரதேசத்தில் பாஜக சறுக்கியது ஏன்? யோகி - மோடி இடையே விரிசலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News