Bihar Truck accident : 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி ; ஓட்டுநர் கைது!

Bihar Truck accident : பிகாரில் வழிபாடு செய்துகொண்டிருந்த கூட்டத்தின் லாரி புகுந்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அந்த லாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2022, 12:49 PM IST
  • நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரத்தில் கூட்டமாக நின்று வழிபாடு.
  • வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டு இழந்து கூட்டத்திறகு புகுந்தது.
  • 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக போலீசார் தகவல்.
Bihar Truck accident : 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி ; ஓட்டுநர் கைது! title=

பிகாரில் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மத வழிப்பாட்டு கூட்டத்தில், லாரி புகுந்ததில் 7 சிறுவர்கள் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்ஹார் - ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்கு புகுந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தற்போது சீராகியுள்ளது. 

இந்த விபத்து நேற்று ஏற்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்தை ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரோஷன் ஆய்வு செய்தார். அப்போது, குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆனால், அதை போலீசார் உறுதிசெய்யவில்லை. 

மேலும் படிக்க | மீண்டும் ஷாக்... காதலியை 6 துண்டுகளாக வெட்டிய இளைஞர் - குடும்பமும் உடந்தை!

இதுதொடர்பாக வைஷாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில்,"7 சிறுவர்கள் உள்பட மொத்தம் 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரை மீட்டுள்ளோம். வேகமாக வாகனத்தை செலுத்தியதற்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை நலமாகவே உள்ளது" என்றனர். 

தலைநகர் பாட்னாவில் இருந்து 30 கி.மீ., தூரத்தில்தான் விபத்து நடந்து இடம் உள்ளது. இரவு 9 மணியளவில் உள்ளூர் பக்தர்கள், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு மரத்திற்கு அருகே கூட்டமாக நின்று வழிபாடு நடத்திவந்துள்ளனர். அதாவது, திருமணத்தை முன்னிட்டு செய்யப்படும் சடங்குகளை அவர்கள் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. சுல்தான்பூரில் நடக்க இருந்த திருமணம் ஒன்றை முன்னிட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்கள் வர்ஷா (8), சுருஷி (12), அனுஷ்கா (8), ஷிவானி (8), குஷி (10), சந்தன் குமார் (20), கோமல் குமாரி (10), சதீஷ்  குமார் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு,  பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணத்தொகையாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு மிகவும் தாமதாக வந்ததாக அப்பகுதியினர் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 

இதனால், முதலில் அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வுக்கு அனுமதிக்காமல் பிரச்சனை செய்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் இறுதி மரியாதைக்கு தலா ரூ. 20 ஆயிரம் தருவதாக மாவட்ட உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரே, உடல்களை எடுத்துச்செல்ல ஒத்துழைத்துள்ளனர்.  

மேலும் படிக்க | நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News