POCSO சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது!

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

Last Updated : Jul 24, 2019, 10:22 AM IST
POCSO சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது! title=

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 'போக்சோ' என அழைக்கப்படுகிறது. 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, "நமது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் சிறார்களை வைத்து ஆபாசபடங்கள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த வகையான குற்றங்களை செய்பவர்களுக்கும், சிறார் ஆபாச படங்களை வைத்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது." என தெரிவ்வித்துள்ளார்.

மசோதாவின் விதிகள் குறித்து விரிவாகக் கூறும் பட்சத்தில், பிரிவு 15-ன் கீழ், ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாசப் படத்தை சேமித்து வைத்துள்ளவர்களுக்கு ரூ .5,000 (முதல் சந்தர்ப்பத்தில்) அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது சந்தர்ப்பத்தில், குழந்தை ஆபாசப் படங்களை பகிர / அனுப்பும் நோக்கத்துடன் புகார பெரும் பட்சத்தில் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் குழந்தைகள் சம்ப்தப்பட்ட ஆபாச படங்களை காட்சிப்படுத்தப்பட்டால், விநியோகிக்கப்படுதல் அல்லது பிரச்சாரம் செய்தல் பேன்ற குற்றங்களுக்கு தண்டனை சிறைவாசம் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் ஸ்மிரித்தி தெரிவித்துள்ளார். 

"இதுபோன்ற ஆபாச படங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால் 3 வருடங்களுக்கும் குறையாத சிறைத்தண்டனை அல்லது 5 வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனவும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News