’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ - ராகுல்காந்தி

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2022, 09:05 AM IST
  • மக்களவையில் ராகுல்காந்தி உரை
  • மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு
  • தமிழகத்தை பா.ஜ.க ஒருபோதும் ஆளமுடியாது
’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ - ராகுல்காந்தி title=

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் ராகுல் காந்தி பேசினார். குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது எனக் கூறிய அவர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். 

ALSO READ | நிதியமைச்சரின் Amrit Kaal நனவாகுமா? இல்லை பகல் கனவா?

இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன. ஒன்று பணக்காரர்களுக்கு. மற்றொன்று ஏழைகளுக்கு எனத் தெரிவித்த ராகுல்காந்தி, இரண்டுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. இரண்டு இந்தியாக்களை உருவாக்கிய இந்த அரசு ஒன்றாக கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவின் 40 விழுக்காடு செல்வம் குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே உள்ளது. 84 சதவீத இந்தியர்கள் வருமானம் குறைந்து, வறுமையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

ALSO READ | தங்கம் மீதான முதலீடு பளபளப்பை இழந்ததா; ஆய்வு கூறுவது என்ன!

அமைப்பு சாரா துறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதால், மேக் இன் இந்தியா திட்டம் நடக்காது. மேட் இன் இந்தியா என பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை அழித்துவிட்டீர்கள் என ஆவேசமாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி,. சிறு, குறு தொழில்களை ஆதரித்தால் மட்டுமே மேட் இன் இந்தியா சாத்தியம். சிறு குறு தொழில்களால் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் எனக் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். இவை உண்மையான புள்ளிவிவரங்கள் எனக் கூறிய அவர், இந்தியா என்பது ராஜாங்கம் கிடையாது. பல மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் எனத் தெரிவித்தார்.

மேலும், வரலாற்றை பற்றிய தெரியாத பா.ஜ.கவால் தங்களுடைய வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது என என ஆவேசமாக தெரிவித்த ராகுல்காந்தி, இந்தியாவின் மையத்தில் இருந்து அனைத்து மாநிலங்களையும் ஆள நினைத்தால், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News