தவறுதலாக வாக்களித்து விட்டேன்! விரலை துண்டித்த தொண்டர்

பாஜகவுக்கு தவறுதலாக வாக்களித்ததால், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தொண்டர் தனது விரலை துண்டித்துக்கொண்டார்.

Last Updated : Apr 19, 2019, 01:44 PM IST
தவறுதலாக வாக்களித்து விட்டேன்! விரலை துண்டித்த தொண்டர் title=

பாஜகவுக்கு தவறுதலாக வாக்களித்ததால், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தொண்டர் தனது விரலை துண்டித்துக்கொண்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்த பவன்குமார் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.

நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பாஜகவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார். இதனால் கோபம் அடைந்த அவர் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.

Trending News