பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பட்ஜெட் காரணம் அல்ல: அருண் ஜெட்லி விளக்கம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Last Updated : Feb 5, 2018, 04:58 PM IST
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பட்ஜெட் காரணம் அல்ல: அருண் ஜெட்லி விளக்கம்! title=

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது இந்நிலையில், தற்போது சென்செக்ஸ் 406.55 புள்ளிகள் குறைந்து, தற்போது 34,660.20 புள்ளிகளில் உள்ளது.

அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 129.10 புள்ளிகள் குறைந்து, 10,631.50 தற்போது புள்ளிகளில் உள்ளது.

கடந்த மாதம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, தற்போது தேசிய பங்குச் சந்தை நிப்டி 129.10 புள்ளிகள் குறைந்து, 10,631.50 தற்போது புள்ளிகளில் உள்ளது.

பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பங்குச்சந்தை இன்று (திங்கள்கிழமை) வரை இன்னும் சீரடையாத நிலையே தொடர்கிறது.

இது தொடர்பாக இன்று  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம் என்றார்.

மேலும், இது தொடர்பாக அமெரிக்க பங்கு சந்தையை ஒப்பிட்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குகளின் கூர்மையான டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியலின் சராசரி இழப்பு 665.75 புள்ளிகள் அல்லது 2.54 சதவீதம் இருந்திருக்கிறது. முடியும் தருவாயில் 25,520.96 என சரிந்துள்ளது" என்றார்.

Trending News