இலவச LIVE கிரிக்கெட்... JIO TV மீது கடுப்பான கேபிள் டிவி ஆபரேட்டர்கள்: TRAI-க்கு பாய்ந்த கடிதம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2024, 05:16 PM IST
  • OTT தளங்களில் இலவசமாக வரும் நிகழ்ச்சிகள்.
  • பெரும் நஷ்டத்தில் கேபிள் ஆபரேட்டர்கள்.
  • நிலைமையை விளக்கி TRAI -க்கு கடிதம்.
இலவச LIVE கிரிக்கெட்... JIO TV மீது கடுப்பான கேபிள் டிவி ஆபரேட்டர்கள்: TRAI-க்கு பாய்ந்த கடிதம் title=

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம். 

'உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் அசோசியேஷன் டெல்லி (ALCOA INDIA), உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் பிரதிநிதி அமைப்பாக (LCOs / LMOs) செயல்பட்டு வருகிறோம். JIO TV லீனியர் & லைவ் நிகழ்ச்சிகளை (TRAI ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டது) அதன் OTT இயங்குதளத்தில் வழங்குவதன் காரணமாக இந்திய கேபிள் டிவி தொழில்துறை வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பில் மிகப் பெரிய இழப்பை சந்தித்து வருகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறோம். 

"பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்" வழங்கிய தரவுகளின்படி, 2018 இல் இந்தியாவில் 197 மில்லியன் வீடுகளில் தொலைக்காட்சிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 2020 -இல் 210 வீடுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தொலைக்காட்சிகள் உள்ள வீடுகளில், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் சேவைகளை பெறும் வீடுகளின் எண்ணிக்கை 2018 இல் இருந்த 120 மில்லியனிலிருந்து 2020 -இல் 90 மில்லியனாகக் குறைந்துள்ளன. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

OTT இயங்குதளத்தில் அவர்கள் எப்படி நேரியல் உள்ளடக்கத்தை வழங்குகிறார்கள்? இதற்கு முன்பும் இந்தப் பிரச்னையை TRAI மற்றும் MIB உடன் பல முறை எழுப்பியுள்ளோம். ஆனால், OTT முறைப்படுத்தப்படவில்லை என்பதே அவர்களது பதிலாக இருந்து வருகிறது. எனினும், கேபிள் செயல்முறை தொடர்பான சட்டங்கள் குறித்து அவர்களுக்கு (TRAI மற்றும் MIB) இருக்கும் அளவு புரிதலும், தெளிவும் எங்களுக்கு இல்லை. இப்போது நாங்கள் ஒரு தீர்வை பரிந்துரைக்க விரும்புகிறோம். இதை அவர்கள் முன்னரே செய்திருக்கலாம். 

நாங்கள் பரிந்துரைக்கும் தீர்வு இதுதான்: கேபிள் சட்டம் 1995 இன் கீழ், MIB இடமிருந்து அப் லிங்கிங் மற்றும் டவுன் லிங்கிங் அனுமதி கிடைத்த பிறகுதான், லீனியர் டிவியில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் வெளிவருகின்றன. இந்த செயல்முறைகள் அனைத்தும் TRAI ஆல் கட்டுப்படுத்தப்படு MIB ஆல் அங்கீகரிக்கப்படுகின்றன. ஓடிடி தளங்களுக்கு நேரியல் நிகழ்ச்சிகளை அதாவது லீனியர் கண்டெண்ட் (1995 கேபிள் டிவி சட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள) வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து ஒளிபரப்பாளர்களையும் (லீனியர் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள்) எச்சரிக்கக்கூடிய ஒரு உத்தரவு/ஒழுங்குமுறையை அவர்கள் வெளியிட்டால் போதும்.

இந்திய அரசு வழங்கிய அப் லிங்கிங் மற்றும் டவுன் லிங்க்கிங் அனுமதியின்படி, ஒளிபரப்பாளர்கள் நேரியல் / நேரடி நிகச்சிகளை சேனல் IRD-கள் மூலம், MSO, HITS, DTH பிளேயர்கள் மற்றும் IPTV பிளேயர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். அவர்கள் ஓடிடி தளங்களுக்கு லீனியர் நிகழ்ச்சிகளை வழங்க முடியாது. MSO, HITS, DTH நிறுவனங்கள் மற்றும் IPTV நிறுவனங்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்க அவர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளதால் அது சட்டவிரோதமானது. இந்த சட்டவிரோத நடைமுறைக்கு எதிராக TRAI ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது இந்திய கேபிள் டிவி துறையை நாளுக்கு நாள் அழித்து வருகிறது. இந்த முறை TRAI ஒளிபரப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். 

ஹைப்ரிட் பாக்ஸ் / ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிகழ்ச்சிகளை வழங்குகிறது என்றால், அதில் ஏதாவது ட்யூனர் இருந்தால், அது TRAI கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கேபிள் டிவி துறை டென் ஸ்போர்ட்ஸின் இந்தியா v/s இலங்கை தொடர் நேரடி நிகழ்ச்சிக்கு ரூ.19/- + GST ​​செலுத்துகிறது. ஆனால், JIO TV OTT இதை நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகிறது. இது நியாயமற்ற போட்டி. இது இந்திய கேபிள் டிவி தொழில்துறையை அழித்துவிடும்.

லீனியர் லைவ் நிகழ்ச்சியை (இந்தியா v/s இலங்கை தொடர்) ஒளிபரப்பாளர் எவ்வாறு ஜியோ டிவி-க்கு வழங்குகிறார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இது IRD மூலம் வழங்கப்படுகிறதா அல்லது வேறு வழியில் வழங்கப்படுகிறதா? இவை TRAI ஆல் ஒழுங்கமைக்கப்படுவதால், டிராய் அதிகாரிகள் இந்த தகவலை ஒளிபரப்பாளர்களிடமிருந்து பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம். TRAI இன் பதிலுக்காக காத்திருப்போம்.

STAR INDIA Pvt. Ltd. அதன் லீனியர் நிகழ்ச்சிகளை ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றிலும், அதன் OTT இயங்குதளமான  Disney + Hotstar -இலும் வழங்குகிறது. அனைத்து லீனியர் டிவி நிகழ்ச்சிகளும் அவர்களின் OTT செயலிகளில் (சில சமயங்களில், டிவிக்கு முன்) கிடைக்கின்றன. இது சட்டவிரோதமானது.

INDIACAST அதன் லீனியர் நிகழ்ச்சிகளை கலர்ஸ் டிவி, எம்டிவி, போன்றவற்றிலும், அதன் OTT இயங்குதளமான  JIO TV -இலும் வழங்குகிறது. அனைத்து லீனியர் டிவி நிகழ்ச்சிகளும் அவர்களின் OTT செயலிகளில் (சில சமயங்களில், டிவிக்கு முன்) கிடைக்கின்றன. இது சட்டவிரோதமானது.

மேலும், ஒழுங்குபடுத்தப்படாத உள்ளடக்கம் கொண்ட நிகழ்ச்சிகள் சமூகத்தில் எதிர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த OTT இயங்குதளங்கள் மூலம் அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் எந்த வித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திரமாக வெளிவருகின்றன. மேலும் அனைத்து முக்கிய சேனல்களும் கூடுதல் செலவு இல்லாமல் கிடைப்பது கேபிள் டிவியின் சந்தாதாரர்களை, குறிப்பாக இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை கவர்கின்றது. கேபிள் தொலைக்காட்சியில் தொடர்வதை விட ஓடிடி தளங்கள் நியாயமான/சிறந்த விருப்பமாகத் தெரிவதால் இவர்கள் அவற்றுக்கு மாறுகிறார்கள். முக்கிய/பெரிய ஓடிடி தளங்கள் பிராட்காஸ்டர்களின் சொந்த தயாரிப்புகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே இந்த ஓடிடி தளங்களில் நிகச்சிகள் காட்டப்படுகின்றன. 

ஏப்ரல் 13, 2023 அன்று TRAI, MIB & CCI ஆகியவற்றிடம் ஜியோ சினிமாவில் TATA IPL சட்டவிரோதமாக காட்டப்படுவது குறித்து இதேபோன்ற புகாரை அளித்திருந்தோம். ஆனால் இன்று வரை TRAI, MIB & CCI இலிருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News