வீடியோ: கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்து ஒருவர் பலி

செகந்திராபாத்தில் அரசு பேருந்து, கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் வலி...

Last Updated : Jan 14, 2019, 01:33 PM IST
வீடியோ: கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்து ஒருவர் பலி title=

செகந்திராபாத்தில் அரசு பேருந்து, கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் வலி...

ஹைதராபாத்: செகந்திராபாத்தில் நகரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கூட்டத்தில் புகுந்த விபத்தின், பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிப்பதிவு வெளியாகியிருக்கிறது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மியாபூர் பகுதியிலிருந்து, அரசு பேருந்து ஒன்று, செகந்திரபாத் நகரை நோக்கி, 50 பயணிகளுடன் சென்றது. கோபாலபுரம் பகுதியில் சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. 

சாலையோரம் நின்றிருந்த கூட்டத்திற்கு புகுந்த பேருந்து, இறுதியில், மெட்ரோ ரயில் தூணில் மோதி நின்றது. இந்த கோரச் சம்பவத்தின் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, சனிக்கிழமையின் கிளாக் டவர் அருகே இந்த சம்பவம் நடந்தது. இயக்கி அகமது என அடையாளம். வழக்கு தொடர்பாக ஐபிசி பிரிவின் 304-A பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் டிரைவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Trending News