பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ சோதனை!!

Last Updated : Jul 7, 2017, 09:59 AM IST
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ சோதனை!! title=

லாலு பிரசாத் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த போது ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்த்தில் முறைகேடு என சிபிஐ புகார்.

பீகார் மாநில முன்னால் முதல்வரும், முன்னால் ரயில்வே அமைச்சரும் ஆனா லாலு பிரசாத் யாதவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறைக்கு சொந்தமான பாரம்பரிய ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் செய்தலில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி(ராப்ரி தேவி) மற்றும் மகன்(தேஜஷ்வி) மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, பாட்னா, ராஞ்சி, பூரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Trending News