CBSE Board Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் ரிசல்ட், செக் செய்வது எப்படி?

CBSE 10th, 12th Exam Result 2023: கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 6, 2023, 02:02 PM IST
  • 12 லட்சத்துக்கு மேல் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
  • தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.
  • சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
CBSE Board Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் ரிசல்ட், செக் செய்வது எப்படி? title=

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12 ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்ததனர்.

இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை எங்கு, எப்படி சரிப்பார்க்கலாம் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | 28 ஏக்கர்... 655 அறைகள்.. 400 கோடி..! மிரட்டும் தெலங்கானா தலைமைச் செயலகம்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் 2023ஐச் சரிபார்க்க இணையதளங்கள்
1) cbseresults.nic.in

2) results.cbse.nic.in

3) cbse.nic.in

4) cbse.gov.in

சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - ஆன்லைனில் செயலியில் எவ்வாறு ரிசல்டை பார்ப்பது
அதிகாரப்பூர்வ இணையதங்களைத் தவிர, DigiLocker மற்றும் UMANG செயலியிலும் தேர்வு முடிவுகள் சரிப்பார்க்கலாம்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு 2023: தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?
* results.cbse.nic.in அல்லது cbse.gov.in. என்ற இணையதளங்களுக்குள் செல்லவும்.
* முகப்பு பக்கத்தில் காணப்படும் லின்கில் நீங்கள் 10 ஆம் வகுப்பு மாணவர் என்றால் 'Secondary School Examination Class X Results 2023 Announced' என்ற லின்கையும், 12 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் 'Senior School Certificate Examination Class XII Results 2023 Announced' என்ற லின்கையும் கிளிக் செய்யவும்.
* உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண், பாஸ்வோர்ட் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு சப்மிட் செய்யவும்.
* தற்போது உங்களது தேர்வு முடிவு வெளிப்படும். அதை நீங்கள் டவுன்லோட் அல்லது பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு 2023: உங்கள் பள்ளி எண்ணை எப்படி கண்டுபிடிப்பது
உங்கள் தேர்வு முடிவைச் சரிபார்க்கும் போது, சிபிஎஸ்இ உங்கள் பள்ளி எண்ணைக் கேட்கலாம். உங்கள் பள்ளி எண்ணைப் பெறுவதற்கான நேரடி இணைப்பு இதோ.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு 2023: டாப்பர்ஸ் பற்றிய அப்டேட்
இந்த ஆண்டு, சிபிஎஸ்இ டாப்பர்களின் தனிப் பட்டியலை வெளியிடாது. இத்தகைய பட்டியல்கள் அறிவிப்பு மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்குகிறது என்று போர்ட் வாரியம் தெரிவித்துள்ளது.

DigiLocker மூலம் தேர்வு முடிவைப் பதிவிறக்குவது எப்படி
1. digilocker.gov.in க்குச் செல்லவும்.

2. CBSE போர்டு தேர்வு 2023 முடிவுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

3. தேவையான தகவலை உள்ளிடவும்

4. தற்போது உங்களது தேர்வு முடிவு வெளிப்படும். அதை நீங்கள் டவுன்லோட் அல்லது பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நிபுணர்கள் மற்றும் கல்வி வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் பரவி வருகிறது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், தேர்வுகள் இரண்டு தவணைகளாக நடத்தப்பட்டன, முதல் பருவம் நவம்பர் – டிசம்பர் மற்றும் இரண்டாம் பருவம் மே – ஜூன் 2023 இல் நடைபெற்றது. 2019 மற்றும் 2018 இன் கோவிட்க்கு முந்தைய காலக்கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடும் காலக்கட்டத்தை விட 2 நாட்கள் குறைவாக ஜூலை 26 அன்று 41 நாட்களுக்குப் பிறகு முடிவுகளை சி.பி.எஸ்.இ அறிவித்தது.

கடந்த ஆண்டு, இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் பருவத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பரிலும், இரண்டாம் பருவத் தேர்வு மே-ஜூனிலும் நடத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக இருந்தது மற்றும் 14,44,341 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினர்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவலை பகிர்ந்த விஞ்ஞானி? - நடவடிக்கை எடுத்த டிஆர்டிஓ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News