CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்... எப்படி செக் செய்வது?

CBSE 10th, 12th Exam Result 2023: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை ஒரே நாளில் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளின் முறைகளின் அடிப்படையில் சில மணிநேர வித்தியாசத்துடன் இவை வெளியிடப்படக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2023, 01:41 PM IST
  • 10, பிளஸ் 2 தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்.
  • தேர்வு முடிவு எப்போது வரும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.
  • மதிப்பெண்களை இந்த இணையதளங்களில் செக் செய்யலாம்.
CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்... எப்படி செக் செய்வது?  title=

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் 2023: 10, பிளஸ் 2 தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்!! சிபிஎஸ்இ போர்டின் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்வு முடிவு எப்போது வரும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நாளில் வருகின்றன தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 2023 10வது, 12வது பொதுத்தெர்வு முடிவுகள் இடைநிலைக் கல்வி வாரியத்தால் மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் (மே மாதம்) பாதியில் தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை cbse.gov.in அல்லது results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகள் வெளியானதும் சரிபார்க்கலாம். சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அல்லது நேரத்தை சிபிஎஸ்இ இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், மே மாதத்தின் நடுப்பகுதியில் வாரியம் முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் ஏப்ரலில் முடிவடைந்தன

- சிபிஎஸ்இ 10வது விடைத்தாளின் மதிப்பீடு ஏப்ரல் 16, 2023 அன்று நிறைவடைந்தது. 

- சிபிஎஸ்இ 12வது விடைத்தாளின் மதிப்பீடு ஏப்ரல் 2023 இறுதி வாரத்தில் நிறைவடைந்தது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை ஒரே நாளில் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளின் முறைகளின் அடிப்படையில் சில மணிநேர வித்தியாசத்துடன் இவை வெளியிடப்படக்கூடும். சிபிஎஸ்இ 10, 12 போர்டு தேர்வுகள் 2023 -க்கு 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்தனர். தற்போது இந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

CBSE Board Results 2023: மதிப்பெண்களை இந்த இணையதளங்களில் செக் செய்யலாம்

- results.cbse.nic.in
- cbse.nic.in
- results.nic.in
- results.gov.in

மேலும் படிக்க | CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?

டிஜிலாக்கரில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி?

டிஜிலாக்கரில், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை பார்க்கலாம். இதற்கு அவர்கள் தங்கள் மொபைல் போனில் DigiLocker App -ஐ பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, டெஸ்க்டாப்பில் இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இதற்கான வழிமுறை இதோ.

- digilocker.gov.in க்குச் செல்லவும்.

- சிபிஎஸ்இ போர்டு தேர்வு 2023 முடிவுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

- அங்கு கேட்கப்படும் தேவையான தகவல்களை உள்ளிடவும்

- அதன் பின்னர் உங்களது தேர்வு முடிவு வெளிப்படும். அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

UMANG இல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள்: 

உமங் செயலி மூலமும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். 

DigiResults: 

DigiLocker உடன் இணைந்து சிபிஎஸ்இ வாரியத்தின் மற்றொரு டிஜிட்டல் இந்தியா முயற்சியான DigiResults மூலமும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பார்க்க முடியும். 

சிபிஎஸ்இ 2023 போர்ட் முடிவுகள்: டெக்ஸ்ட் மெசேஜ்கள் 

தேர்வு முடிவுகளுக்கான இந்த எஸ்எம்எஸ் சேவையை சிபிஎஸ்இ நிறுத்திவிட்டதை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், சிபிஎஸ்இ இந்த சேவையை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி தொடங்கினால், இந்த மெசேஜ்களை பெற கீழுள்ளவாறு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

2023 10 ஆம் வகுப்புக்கான CBSE போர்டு முடிவுகளுக்கு - cbse10 (rollno)(sch no)(center no) என டைப் செய்து மெசேஜ் செய்யவும்.

2023 12 ஆம் வகுப்புக்கான CBSE போர்டு முடிவுகளுக்கு -  cbse12(rollno)(sch no)(center no) என டைப் செய்து மெசேஜ் செய்யவும்.

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News