CBSE 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் என்று வெளியாகும்? சிபிஎஸ்இ அளித்த தகவல்

CBSE Results 2023: சமீபத்தில் டிஜிலாக்கரில் இருந்து மதிப்பெண் பட்டியலை (மார்க் ஷீட்) பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2023, 10:47 AM IST
  • இந்த வாரம் முடிவுகள் வருமா?
  • சிபிஎஸ்இ போர்ட் என்ன சொல்கிறது?
  • CBSE Class 10, 12 Result 2023: தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
CBSE 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் என்று வெளியாகும்? சிபிஎஸ்இ அளித்த தகவல் title=

CBSE Class 10, 12 Results 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2023ஆம் ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சிபிஎஸ்இ 10வது மற்றும் 12வது வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் தினமும் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. நேற்று, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான போலி அறிவிப்பு வைரலாக பரவியது. 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று அதாவது மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதை மறுத்த சிபிஎஸ்இ, இந்த அறிவிப்பு போலியானது என்று கூறியது. நம்பகமான ஆதாரங்களில் இருந்து வரும் முடிவு வெளியீடு தொடர்பான செய்திகளை மட்டுமே நம்பும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிபிஎஸ்இ -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்ப்பது நல்லது.

இந்த வாரம் முடிவுகள் வருமா?

சிபிஎஸ்இ போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், இந்த வாரமே முடிவுகள் வெளியிடப்படலாம். வெளியீட்டிற்குப் பிறகு, சிபிஎஸ்இ இணையதளத்திலும், டிஜிலாக்கர் அல்லது உமங் செயலியிலும் இதை காண முடியும். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிவிக்கப்படும்.

- cbse.nic.in
- cbseresults.nic.in
- results.nic.in
- result.cbse.nic.in
- cbse.gov.in

மேலும் படிக்க | CBSE 2023 10th, 12th Result: விரைவில் வருகின்றன தேர்வு முடிவுகள், இதோ முக்கிய அப்டேட்

சிபிஎஸ்இ போர்ட் என்ன சொல்கிறது

சமீபத்தில் டிஜிலாக்கரில் இருந்து மதிப்பெண் பட்டியலை (மார்க் ஷீட்) பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், டிஜிலாக்கர் கணக்கை இயக்க மாணவர்களுக்கு 6 இலக்க பாதுகாப்பு பின் தேவைப்படும் ஏற்பாடுகளை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த பின்னை சிபிஎஸ்இ வாரியம் அளிக்கும். இது மாணவர்களின் தனியுரிமைக்கானது. இந்த அறிவிப்பில், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என வாரியம் ஒருவரியில் கூறியுள்ளது. இதை வைத்து இந்த வாரமே முடிவுகள் வரக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

CBSE Class 10, 12 Result 2023: தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

- சிபிஎஸ்இ வகுப்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2023 வெளியிடப்பட்டதும், மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகியவற்றில் இதை பார்க்கலாம். 
 
- சிபிஎஸ்இ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், மாணவர்கள் 'Result' பிரிவில் உள்ள 'Secondary School Examination Class X Results 2023 Announced' அல்லது Senior School Certificate Examination Class XII Results 2023 Announced' இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
 
- மாணவர்கள் அதன் பிறகு புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் தங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.  
 
- அதன் பிறகு மாணவர்கள் 'Submit' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்,  சிபிஎஸ்இ 10/12 வகுப்பு தேர்வு முடிவுகள் அவர்களின் மொபைல்/டெஸ்க்டாப் திரைகளில் தோன்றும்.

மேலும் படிக்க | CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்... எப்படி செக் செய்வது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News