இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கும் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தற்போது மோடி அரசின் சிந்தனைக் குழு, அதாவது NITI ஆயோக், அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு கொண்ட உணவுகள் மீதான வரியை அதிகரிப்பது, 'பிரண்ட்-பேக் லேபிளிங்', போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக நிதி ஆயோக் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.
நிதி ஆயோக்கின் திட்டம்
2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் ஆண்டறிக்கையில், நாட்டில் உள்ள மக்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
ஜூன் 24, 2021 அன்று, NITI ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) தலைமையில், தாய்மார்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளை உடல் பருமனில் பிரச்சனையில் பாதுகாக்கும் வழிகள் குறித்த தேசிய அளவிலான ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், நிதி ஆயோக் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் (IEG) மற்றும் இந்திய பொது சுகாதார அமைப்பு (PHFI) ஆகியவற்றுடன் இணைந்து இது திடர்பாக திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுகிறது. இதன் மூலம், கிடைக்கப்பெறும் ஆதாரங்களின் அடிப்படையில், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வருகின்றன.
வரி விதிக்கப்படும் பொருட்கள்
NITI ஆயோக்கின் நடவடிக்கைகளில் HFSS (அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள்) தயாரிப்புகளின் பிரண்ட்-பேக் லேபிளிங், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் மற்றும் அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு உள்ளடக்கம் கொண்ட பொருட்களின் மீதான வரி அதிகரிப்பு ஆகியவை அடங்கும். பிராண்டட் அல்லாத பொரித்த உணவுகள், சிப்ஸ் மற்றும் சிற்றுண்டிகளுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இப்போது இவை அனைத்தின் மீதும் உடல் பருமன் தொடர்பான கொழுப்பு வரி விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
NITI ஆயோக் உடல் பருமன் தொடர்பான அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது. 2019-20 ஆம ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் (NFHS-5), 2015-16 ஆண்டில் பருமனான பெண்களின் எண்ணிக்கை 20.6 சதவீதம்ாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 24 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே சமயம் உடல் பருமன கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 18.4% லிருந்து 22.9 % என்ற அளவில் அதிகரித்துள்ளது. உடல் பருமன் பிரச்சனையில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, இப்போது மோடி அரசு புதிய வரியை விதிக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR