சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் திடீர் ராஜினாமா....

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2018, 06:34 PM IST
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் திடீர் ராஜினாமா.... title=

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்...

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இன்றுகாலை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் தனது பதவியை திடீர் என ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ராஜினாமா கடித்தைத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவேன் எனவும் ராமன் சிங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

 

Trending News