பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளார்!

Last Updated : Jun 20, 2018, 05:39 PM IST
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா! title=

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளார்!

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் பதவி வகித்து வருகின்றார். இவரது 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த 2017-ஆம் முடிவடைந்ததை அடுத்து மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இதனை உறுதிப்படுத்தும் விதமா மத்திய அமைச்சர் அருண்மஜேட்லி தனது முகப்புத்தகத்தில் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்களின் ராஜினாமா குறித்த பதிவிட்டுள்ளார். மேலும் தனது குடும்ப விவகாரங்களை சந்திக்க வேண்டி அவர் அமெரிக்க திரும்பவுள்ளதாகவும், சில தினங்களுக்கு முன் தம்மிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடிய போது இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் அந்த பதவியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிப்பட்ட முறையில் அவரது அறிவார்ந்த திறமை, யோசனைகளை தாம் இழக்க நேரிட்டுள்ளதாகவும் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். இந்திய பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அரவிந்த் சுப்பிரமணியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனது ராஜினாமா முடிவை அறிவித்த அருண் ஜேட்லிக்கு, அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் தனது டுவிட்டரின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். 

Trending News