டெல்லியில் சில்லி காலை; குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி C

வடமாநிலங்களில் வாட்டியெடுக்கும் கடும் குளிர்... இயல்புவாழ்க்கை பாதிப்பதால் மக்கள் கடும் அவதி....  

Last Updated : Dec 31, 2018, 12:59 PM IST
டெல்லியில் சில்லி காலை; குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி C title=

வடமாநிலங்களில் வாட்டியெடுக்கும் கடும் குளிர்... இயல்புவாழ்க்கை பாதிப்பதால் மக்கள் கடும் அவதி....  

வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு அளவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. காற்று மாசு அளவு, இவ்வாறு அதிகளவு பதிவாவது, இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரும், காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகின்றன. ஏற்கனவே, காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி வாசிகளுக்கு, கடுங்குளிர் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், தற்போதைய குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.6 டிகிரி செல்சியஸாகவும், சாதாரண அளவிற்கும் குறைவான மூன்று முனையுடனும் கூடியது. ஈரப்பத நிலையானது 100% இல் பதிவு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் மேலோட்டமான மூடுதிறையின் சாத்தியக்கூறுடன் கூடிய வானிலை முன்னறிவிப்பு வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

"அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 22 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 3 டிகிரி செல்சியஸ் மற்றும் 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 

Trending News