CAA விவகாரம்: UN மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு!

சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது!!

Last Updated : Mar 3, 2020, 02:48 PM IST
CAA விவகாரம்: UN மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு! title=

சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட CAA வழக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுமதிக்கும்படி UN மனித உரிமைகள் ஆணையர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் தன்னையும் அனுமதிக்க கோரும் இடையீட்டு மனுவாக UN மனித உரிமைகள் ஆணையரின் மனு உள்ளது.

UN மனித உரிமைகள் ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மத்திய அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில், திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் விதிகளுக்கு இணங்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிட வெளிநாட்டு அமைப்பு எதற்கும் உரிமையில்லை என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதற்க்கு முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவில் உள்ள இந்திய அரசின் நிரந்தர குழுவிற்கு, UN மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் பங்குகொள்ள, UN மனித உரிமைகள் ஆணையர் மிக்கேல் பாக்கெட் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இந்திய அணிக்கு தெரிவிக்கப்பட்டது. 

 

Trending News