ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாகிறது CAB!

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வியாழக்கிழமை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-க்கு தனது ஒப்புதலை அளித்தார் எனவும், அதை ஒரு சட்டமாக மாற்றினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 13, 2019, 06:26 AM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாகிறது CAB! title=

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வியாழக்கிழமை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-க்கு தனது ஒப்புதலை அளித்தார் எனவும், அதை ஒரு சட்டமாக மாற்றினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய சட்டம் மூன்று அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக உறுதியளிக்கிறது, ஆனால் அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருத்தல் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே குடியுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அதன் வெளியீட்டுடன் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள், மாறாக அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

முன்னதாக., குடியுரிமை (திருத்த) மசோதாவை புதன்கிழமை மாநிலங்களவையிலும், மக்களவையால் திங்களன்று கடுமையான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.

வாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு, குடியுரிமை (திருத்த) மசோதா என்பது அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகவே என்று கூறியுள்ளது.

இந்த மசோதா வடகிழக்கில் பாரிய எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக அசாமில் போராட்டங்கள் உயிர்பலி என்ற எல்லை கோட்டினை எட்டியுள்ளது. அண்டை மாநிலமான மேகாலயாவின் தலைநகரின் சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளது, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கதேசத்துடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அசாமில் உள்ள எதிர்ப்பாளர்கள், இந்த நடவடிக்கை வெளிநாட்டு புலம்பெயர்ந்தோரிடையே மதவாத எதிர்ப்பினை தூண்டும் என கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய சட்டத்தின் பெரிய சிக்கல் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்காததன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

என்றபோதிலும் இந்த குடியுரிமை (திருத்த) மசோதா குறித்து மோடி தெரிவிக்கையில்., அசாம் மக்கள் பயப்பட இதில் ஒன்றுமில்லை., "நான் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் - உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாராலும் பறிக்க முடியாது. அது தொடர்ந்து செழித்து வளரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத்தைத் தொடர்ந்து குடிமக்களின் தேசிய பதிவேடு நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் கூறியுள்ளது, அதாவது முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவின் அசல் குடியிருப்பாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், மேலும் இந்த மூன்று நாடுகளிலிருந்து அகதிகள் அல்ல எனவும் நிரூபித்தல் வேண்டும். சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மதங்களின் உறுப்பினர்கள் இதற்கு மாறாக, குடியுரிமைக்கான தெளிவான பாதையைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News