உறைப்பனியின் பிடியில் சிக்கி தவிக்கும் வடஇந்தியா...!

காஷ்மீரின் வடக்கு மூலையில் இருந்து தலைநகர் தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் குளிர் தொடர்ந்து வாட்டியெடுக்கிறது.…

Written by - | Edited by - Mukesh M | Last Updated : Dec 26, 2019, 09:32 AM IST
உறைப்பனியின் பிடியில் சிக்கி தவிக்கும் வடஇந்தியா...! title=

காஷ்மீரின் வடக்கு மூலையில் இருந்து தலைநகர் தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் குளிர் தொடர்ந்து வாட்டியெடுக்கிறது.…

காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடர்ந்து பூஜ்ஜிய டிகிரிக்குக் கீழே வெப்பநிலை உள்ளது. குளிர்ந்த காலநிலை நிலவுகிறது, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, இந்த பருவத்தின் மிக குளிரான இரவை ஸ்ரீநகர் பதிவு செய்தது. 

இங்கு புதன்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 4.3 டிகிரி செல்சியஸாக பதிவு ஆனது. கடுமையான குளிர் காரணமாக, தண்ணீர் குழாய்கள் உறைந்து உடைப்பு எடுத்துள்ளது.  யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே நகரில் மைனஸ் 17.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு ஆனது. காஷ்மீர் தற்போது உறைப்பனியின் பிடியில் உள்ளது.

சில்லே-கலன் எனப்படும் இந்த உறைப்பனி காலம் 40 நாள் நீடிக்கும். மிகவும் குளிராக இருக்கும்போது இந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உறைப்பனி காலம் டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடையும். நாட்டின் தலைநகர் தில்லியிலும் மக்கள்குளிரால் வாடுகின்றனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகையான புதன்கிழமையன்று தில்லி மக்கள் கடுமையான குளிரை எதிர்கொண்டனர். குறைந்தபட்ச வெப்பநிலை ஆறு. செல்சியஸ் ஆக பதிவானது. வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி, 1997-க்குப்பிறகு டிசம்பர் மாதத்தில் இது தில்லியில் பதிவான மிக குறைந்த வெப்பநிலையாகும்.

வார இறுதிக்குள் வெப்பநிலை நான்கு டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குளிர்காலம் கடுமையாக உள்ளது. இந்த பருவத்தில் கடும் குளிர் காரணமாக மாநிலத்தில் 30 பேர் இறந்துள்ளனர். பிஜ்னோர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸும் அதிகபட்சம் 11 டிகிரி செல்சியஸ் பதிவானது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் குளிர்ந்த காற்றால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

மீரட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று, நிலவிய குளிர்நிலை கடந்த 15 ஆண்டுகளின் சாதனையை முறியடித்தது, மீரட் அதிகபட்ச வெப்பநிலை 11.6 ஆகவும், குறைந்தபட்ச இரவு வெப்பநிலை 6.0 டிகிரி செல்சியஸாக பதிவானது. பரவலாக இரவு வெப்பநிலை 4.8 முதல் 1.4 டிகிரி வரை பதிவாகிறது. பிஜ்னோர், சஹரன்பூர், முசாபர்நகர், பாக்பத், ஷாம்லி ஆகிய பகுதிகளில் பகலில் சூரியனைக் காணமுடியவில்லை. 

சஹரன்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரியை எட்டியுள்ளது. ராஜஸ்தானிலும்  இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலை சிகார்-ல் 2.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. பிலானியில் 4.3 டிகிரி , சுருவில் 4.5 டிகிரி , ஜெய்சால்மரில் 5.4 டிகிரி மற்றும் கங்காநகரில் 5.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல பிகானீரில் 6.1 ° C, ஜெய்ப்பூரில் 7.1 ° C, அஜ்மீரில் 9.5 ° C, ஜோத்பூரில் 10.2  டபோக்கில் 12.2 ° C ...பதிவானது. கணிப்புகளின்படி அடுத்து வரும் நாட்களிலும் குளிர் மிகக் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Trending News