மகாராஷ்டிரா: இனி கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்!

மகாராஷ்டிராவில் இனி அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் பாடுவதை மகாராஷ்டிரா அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Last Updated : Feb 13, 2020, 08:55 AM IST
மகாராஷ்டிரா: இனி கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்! title=

மகாராஷ்டிராவில் இனி அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் பாடுவதை மகாராஷ்டிரா அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான வருகிற 19 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது நடைமுறைக்கு வரும். இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதன் மூலம் வகுப்பு தொடங்குவதற்கு முன் 15 லட்சம் மாணவர்களாவது தேசிய கீதத்தை பாடுவார்கள். அந்தவகையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும். 

மராட்டியத்தில் உள்ள பள்ளிகளில் அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பதை சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கம் கடந்த மாதம் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Trending News