அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் டெல்லியில் சோனியா காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

Last Updated : Dec 28, 2019, 02:53 PM IST
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று title=

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் டெல்லியில் சோனியா காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 134-வது நிறுவன தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

 

 

 

 

 

 

 

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த தினத்தை குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Trending News