அரசியல் தலைவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி!

மோட்டார் சைக்கிளில் வந்த அரசியல் தலைவருக்கு ஹெல்மெட், முகமூடி அணியாததற்காக ரூ .11,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 04:02 PM IST
அரசியல் தலைவருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி! title=

COVID-19 இன் இரண்டாவது அலை இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில், மாநில அரசுகள் முழு ஊரடங்கு மற்றும் பகுதிநேர ஊரடங்கு போன்ற கட்டுப்பட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் பலர் ஊரடங்கு விதிகளை மீறி முகமூடி இல்லாமல் பலர் வீடுகளை விட்டு  வெளியே வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்படுகின்றன. 

நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள பேரிடர் கால விதிகளை மீறுவோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைகளுக்கு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இன்னும் பலர் விதிகளை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் இருக்கின்றனர்.

ALSO READ |  மக்களே உஷார், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம்

பொதுமக்கள் அப்படி என்றால், சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டிய சில அரசியல் தலைவர்களும் தவறுகளை செய்கின்றனர். இது பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வரிசையில், கொரோனா விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு காவல்துறைக்கு ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். 

ஒரு மோட்டார் பைக்கில் ஜாலியாக வந்த அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர் உடனடியாக அந்த இடத்திலுள்ள போலீஸ் அதிகாரியிடம் அவர் ஒரு அரசியல் தலைவர் என்று சொல்கிறார். இருப்பினும், சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் அந்த நபரின் பேச்சைக் காதில் வாங்கவேயில்லை.

சம்பவ இடத்தில் இருந்த போலீசார் குற்றவாளிக்கு ரூ .11,000 அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வழங்கினர். பைக்கில் சரியான பதிவு எண் இல்லை. பதிவுத் தட்டு உடைந்து நான்கு இலக்கங்கள் மட்டுமே இருந்தன. ஹெல்மெட் அணியவில்லை போன்ற காரணங்களால் அவருக்கு ரூ .10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முக்கியமாக அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதால், கூடுதலாக ரூ .1,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

ALSO READ |  எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!

மோட்டார் பைக்கில் வந்த நபர் தனது முகத்தை ஒரு துணியால் போர்த்திக்கொண்டு காவலரை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் மூத்த போலீஸ் அதிகாரி இதுபோன்ற செயல்களைச் செய்வதால் எந்த பயனும் இல்லை. முதலில் அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் காவலர் கூறினார். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளின் சாவியையும் போலீசார் எடுத்துக் கொண்டனர். 

இந்த சம்பவ நடைபெற்ற சரியான இடத்தை பற்றி தெரியவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் சரியான காரணமின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் அனைவரையும் தடுக்க முயற்சிக்கின்றனர். சரியான காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வருவது ஆபத்தானது. மக்களை பயமுறுத்தும் நோக்கில் காவல்துறை செயல்படவில்லை. மக்களின் உயிரை காப்பற்றவது தான் காவல்துறையின் பணி என்பதால், இதுபோன்ற சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ALSO READ |  சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News