முடிவுக்கு வந்தது கொரோனா காலர்டியூன்..!

கொரோனா தொற்று பாதிப்புகள் பெரும்பாலும் குறைந்துவிட்டதால் கொரோனா காலர்டியூனை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 28, 2022, 03:34 PM IST
  • மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காலர் டியூன்
  • சுகாதாரத்துறைக்கு தொலைத்தொடர்புத்துறை கடிதம்
  • கொரோனா காலர்டியூனை கைவிட மத்திய அரசு முடிவு
முடிவுக்கு வந்தது கொரோனா காலர்டியூன்..!  title=

சீனாவில் இருந்து படையெடுத்த கொரோனா தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளையே முடக்கியது. இந்தியாவில் முதல் தொற்று கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. ஏராளமானோர் இந்த தொற்றின் பாதிப்பால் உயிரிழந்த சோகமும் அறங்கேறியது. இதனால், மத்திய, மாநில அரசுக்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக அனைத்து செல்போன்களிலும் காலர் டியுனாக கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செய்தி ஒலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருமலுடன் தொடங்கும் அந்த காலர் டியூனை யாராலும் மறந்திருக்க முடியாது. அதனை தொடர்ந்து, ஒருவரை தொடர்பு கொள்ள அழைக்கும்போது ஒலிக்கும் அந்த காலர்டியூலில் இருமலை அகற்ற வேண்டும் என கோரிக்கைகளும், புகார்களும் எழுந்ததையடுத்து அதை மத்திய அரசு அகற்றி புதிய காலர்டியூனை வெளியிட்டது.

மேலும் படிக்க | சிரித்துக்கொண்டே என்ன பேசினாலும் குற்றம் அல்ல: உயர்நீதிமன்றம்

இப்படி கடந்த 2 ஆண்டுகளாக ஒலித்து வரும் அந்த காலர்டியூனையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, அவசர காலத்தில் யாரேயேனும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது இந்த காலர்டியூன் இடையூறாக உள்ளது என கூறப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த விழிப்புணர்வு காலர்டியூனை கைவிடுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தொலைத்தொடர்புத்துறை சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

அந்த கடித்தில் , சுமார் 21 மாதங்களாக செயல்பாட்டில் உள்ள கொரோனா காலர்டியூன், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நோககத்தை நிறைவேற்றி உள்ளது. தற்போது அதற்கு அவசியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த காலர்டியூனை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு விரைவில் கொரோனா காலர்டியூனை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் தொகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News