வைரசை பரப்புங்கள் என்று கருத்து பதிவு செய்த இன்ஜினியர் கைது

பொது இடங்களில் வைரசை பரப்புங்கள் என பேஸ்புக்கில் பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

Last Updated : Mar 28, 2020, 08:43 AM IST
வைரசை பரப்புங்கள் என்று கருத்து பதிவு செய்த இன்ஜினியர் கைது title=

கொரோனா வைரஸின் அழிவு உலகிலும் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மூன்று வாரங்கள் Lockdown அறிவித்துள்ளார். இதுவரை 854 பேரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 47 பேர் வெளிநாட்டினர். 63 பேர் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது குறித்து மக்களுக்கு இந்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, இது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அரசாங்கம் திரும்ப அழைத்து வருகிறது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் முஜீப் முகமது தனது சமூகவலைதள பக்கமான பேஸ்புக்கில், கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரசை பரப்புவோம் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தற்போது அவரை கைது செய்தது. 

Trending News