Cyber Crime Prevention: சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை

Cyber Crime Prevention: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம்களுக்கு எதிராக வானொலி பிரச்சாரம், சமூக வலைத்தள பதிவு, எஸ்எம்எஸ், ஹெல்ப் லைன் என மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 28, 2022, 12:02 AM IST
Cyber Crime Prevention: சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை title=

புது டெல்லி: இந்தியாவில் சைபர் கிரைம் தோடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.

சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக @cyberdost என்ற டிவிட்டர் பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் வீடியோக்கள், புகைப்பட காட்சி மற்றும் படைப்புகள் மூலம் என இதுவரை 1066-க்கும் மேற்பட்ட இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன. இதுவரை @cyberdost பக்கத்தை 3.64 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

100 கோடிக்கும் அதிகமான எஸ்எம்எஸ்
இதன் மூலம் பொதுமக்களுக்கு ரேடியோ பிரச்சாரம் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பாக 100 கோடிக்கும் அதிகமான எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோக்கள்/GIF மூலம் சைபர் கிரைம் தடுப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறிப்புகள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணவு சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க: Cyber Fraud: பணமோசடியை தடுக்க தேசிய ஹெல்ப்லைனை தொடக்கி வைத்தார் அமித் ஷா

சமூக ஊடக சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு பக்கம்:
ட்விட்டர்: https://twitter.com/Cyberdost
முகநூல்: https://www.facebook.com/CyberDosti4C
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/cyberdosti4c
டெலிகிராம்: https://t.me/cyberdosti4c

மாணவர்களுக்கு கையேடு
சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்திற்காக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக MyGov உடன் I4C (இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்)  இணைந்துள்ளது. இதனுடன் இணைய பாதுகாப்பு என்ற தலைப்பில் இளம் வயதினருக்கும் மற்றும் மாணவர்களுக்கான கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வாரம்
அரசாங்க அதிகாரிகளின் நலனுக்காக “தகவல் பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள்” உள்ளிட்டவற்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது பல்வேறு மாநிலங்களில் காவல் துறையுடன் இணைந்து C-DAC மூலம் இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரங்களை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க: இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers! திடுக்கிடும் தகவல்

எச்சரிக்கைகள்/ஆலோசனைகள்
I4C மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள்/துறைகளுடன் சைபர் கிரைம் தடுப்பு ஆலோசனைகள் நடவடிக்கையாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கைகள்/ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

ஹெல்ப்லைன் எண் “1930”
தேசிய சைபர் கிரைம் போர்டல் மற்றும் தேசிய கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் “1930” ஆகியவற்றை விளம்பரப்படுத்த டெல்லி மெட்ரோவிடம் கோரப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு
இணைய பாதுகாப்பு, மின்னஞ்சல், மொபைல் பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படை இணைய விழிப்புணர்வை வழங்குவதற்காக 'சைபர் விழிப்புணர்வு -"செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" (அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு) குறித்த சைபர் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஜனவரி, 2022 இல் வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க: Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்

சைபர் விழிப்புணர்வு தினம்
அக்டோபர் 6, 2021 (புதன்கிழமை) முதல் சைபர் தடுப்பு நடவடிக்கை பொது விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை காலை 11 மணிக்கு சைபர் விழிப்புணர்வு தினத்தை உள்ளூர் மொழிகளில் ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இது சம்பந்தமாக ஆண்டு செயல் திட்டத்தையும் தயார் செய்யுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

"ஆண்டு செயல் திட்டம்" 
அக்டோபர் 6, 2021 முதல் சைபர் சுகாதாரம் குறித்து “ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை சைபர் ஜாக்ருக்தா திவாஸ்” காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எம்ஹெச்ஏ கேட்டுக் கொண்டன. மேலும் இது தொடர்பாக "ஆண்டு செயல் திட்டம்" தயாரிக்கவும் கோரப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை
மத்திய/மாநில/யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை விழிப்புணர்வை அளிக்கும் வகையில், அனைத்து பிரிவுகளுக்கும் 6' முதல் 12' வரையிலான சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் விழிப்புணர்வு குறித்த பாடத்திட்டத்தை தொடங்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க: Password-ஐ ஹேக் செய்ய சில நொடிகள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News