Gramin Bharat Bandh On February 16: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 'Delhi Chalo' (டெல்லியை நோக்கி) என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லியின் எல்லைகள் கடும் பதற்றத்தில் இருக்கின்றன.
விவசாயிகளின் கோரிக்கைகள்
'டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாய சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முழு அடைப்பு போராட்டத்தையும் அறிவித்திருந்தன. விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பயிர்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சட்டங்களின் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்டுகின்றன.
இது மட்டுமின்றி பல கோரிக்கைகளையும் விவசாய சங்கங்கள் முன்னிறுத்தி உள்ளனர். அரசு தனது பணியாளர்களை ஒப்பந்த ரீதியில் எடுக்கக் கூடாது, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானதாக கருத்தப்படுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் ஆரம்பம் “டெல்லி சலோ”
விவசாய சங்கங்களுக்கு அழைப்பு
இந்நிலையில், விவசாய சங்கமான சம்யுக்தா கிசான் மோர்சா, நாடு முழுவதும் உள்ள ஒத்த சிந்தனையுடைய விவசாய சங்கங்கள் வரும் பிப். 16ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் (Gramin Bharat Banth) பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய தொழிற்சங்கங்கள் உடன் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு
பகல் நேரத்தில் பாரத் பந்த் மட்டுமின்றி விவசாயிகள் நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலான மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு மணி நேரம் மூடப்படும் எனவும் கூறப்படுகிறது.
விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார மாநிலங்களில் இந்த போராட்டத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக, விவசாயிகளின் இந்த பந்த் காரணமாக சிறு நகரங்களில் இருக்கும் கடைகள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை பிப். 16ஆம் தேதி அடைக்கப்படும். இந்த பந்த்தால் போக்குவரத்து, சரக்கு பரிமாற்றம், விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம் ஆகியவையும் தடைப்படும் என தெரிகிறது.
இருப்பினும், அவசர சேவைகளான ஆம்புலன்ஸ் இயக்கம், செய்தித்தாள் விநியோகம், மருத்தகங்கள், திருமணம் ஆகியவற்றில் எப்பிரச்னை இருக்காது. குறிப்பாக, பள்ளியில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களும் தடுக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க | தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டியது அவசியமா? காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ