மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2024, 02:05 PM IST
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்! title=

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம், இன்று திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்  அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, டெல்லி முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது, டெல்லி முதல்வர் "விசாரணைக்கு முற்றிலும் ஒத்துழைக்கவில்லை" என்று கூறி கெஜ்ரிவாலை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ED கோரியது. 

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், முன்னதாக, கடந்த மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் 28ம் தேதி அன்று, நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவாலின் ED காவலை ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்தது. வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்ற நபர்களுடன் தில்லி முதல்வரை விசாரணை செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.  மேலும், "சில ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கோவா வேட்பாளர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன" என்றும் ED நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னதாக, மதுபான முறைகேடு ஊழல் வழக்கில் டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என 3 அமைச்சர்கள் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 நிறுவனங்களின் கைகளுக்கு மாறின. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராகாமல், முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில், நீதிமன்றம் கைவிட்டுவிட்ட நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

மேலும் படிக்க | சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

முன்னதாக, மார்ச் 31 அன்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார் மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியக் குழுவின் உயர்மட்டத் தலைவர்கள், கெஜ்ரிவாலின் ED கைதுக்கு எதிராக தேசிய தலைநகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஒரு போராட்டத்தை நடத்தினர். டெல்லி முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்,  ஜனநாயகத்தை காக்கவும் என்ற ‘சேவ் டெமாக்ரசி’ பேரணியில் கலந்து கொண்டார்.

போராட்டத்தின் போது, சுனிதா கெஜ்ரிவால் சிறையில் தனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தையும் வாசித்தார். அதில் அவர் எதிர்கட்சியின் இந்தியா கூட்டணி சார்பாக ஆறு உத்தரவாதங்களை உறுதியளித்தார். இந்த ஆறு உத்தரவாதங்களில் நாடு முழுவதும் 24 மணி நேர மின்சாரம், நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவச கல்வி, மொஹல்லா கிளினிக்குகள், விவசாயிகளுக்கான MSP மற்றும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த முடியுமா? சட்டம் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News