டெல்லி தேர்தல் தோல்வியால் காங்கிரசில் சலசலப்பு; இப்போது கேள்வி எழுப்பிய ஹூடா, சிந்தியா

டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் தோல்வி அடைந்துள்ளதால், பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது பூபேந்திர ஹூடா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 13, 2020, 05:23 PM IST
டெல்லி தேர்தல் தோல்வியால் காங்கிரசில் சலசலப்பு; இப்போது கேள்வி எழுப்பிய ஹூடா, சிந்தியா title=

புது டெல்லி: டெல்லி மட்டுமில்லை காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது அந்த கட்சி டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பூஜ்ஜியத்தை மட்டும் அவர்கள் தக்க வைத்துக் கொண்டார் என்பது அவர்களின் நிலையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் தேர்தல் மூலோபாயத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிவருகிறார்கள். 

அந்த வரிசையில், முன்னாள் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, கட்சின் மூலோபாயத்தை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா டெல்லி தேர்தலில் காங்கிரஸின் பொறுப்பாளராக இருந்த பிசி சாக்கோவை குறிவைத்துள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா கேள்வி:
டெல்லியில் இரண்டாவது முறையாக தனது கணக்கைத் திறக்கத் தவறிய காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள மோதல்கள் வெளியாகி வருகின்றன. டெல்லி மாநில காங்கிரசை அடுத்து, இப்போது மத்திய தலைமையும் இலக்கு வைத்து சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய சிந்தனை மற்றும் புதிய மூலோபாயத்தில் காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார். 

அதே நேரத்தில், முன்னாள் ஹரியானா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்திர சிங் ஹூடாவும் பிசி சாக்கோவை விமர்சித்து பேசியுள்ளார்.

மீண்டும் காங்கிரசுக்கு டெல்லியில் பூஜ்ஜிய இடங்கள் மட்டுமே கிடைத்ததால், இந்த தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, முதலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பின்னர் பி.சி.சாக்கோ பதவியை ராஜினாமா செய்தனர். 

தோல்விக்கு காரணம் முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த ஷீலா தீட்சித்:
டெல்லியில் தோல்விக்கு காரணம் முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த ஷீலா தீட்சித் தான் என பிசி சாக்கோ குற்றம் சாட்டினார். தனது பதவியை ராஜினாமா செய்த பி.சி.சாக்கோ கூறியது, "காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி ஷீலா தீட்சித் ஜி முதல்வராக இருந்தபோது 2013 ல் தொடங்கியது. ஒரு புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி முழு காங்கிரஸ் வாக்கு வங்கியையும் பறித்தது. அதன் பின்னர் எங்களால் அதை திரும்பப் பெற முடியவில்லை. அது இன்னும் ஆம் ஆத்மி கட்சியுடன் உள்ளது என்றார். இது பெரும் அதிர்ச்சியை கட்சிக்குள் ஏற்படுத்தியது.

ஒருபுறம் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை பாராட்டினார்கள். மறுபுறம், ஷர்மிஷ்டா முகர்ஜி போன்றவர்கள் இந்த "பாராட்டை" கேள்வி எழுப்பினர். முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தின் ட்வீட் குறித்தும் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி கேட்டார். 

ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி:
ப. சிதம்பரத்தின் வாழ்த்து ட்வீட்டை, மீண்டும் ட்வீட் செய்த ஷர்மிஷ்டா, மரியாதையுடன் ஐயா, பாஜகவை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதா? அப்படி இல்லையென்றால், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?  ஆம் என்றால், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம் என்று கூறினார்.

அல்கா லாம்பா அறிவுரை:
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு வந்த அல்கா லம்பா, தேர்தல் முடிவுகளிலிருந்து ஒரு "புதிய அணியை" உருவாக்கி கடுமையாக உழைப்பது குறித்தும் பேசுகிறார். அல்கா லாம்பா சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு மோசமாக தோற்றார். அவர் ஐந்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றார். 

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு ஒற்றுமை தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பல பிரிவுகள் தனித்தனியாக செயல்பட்டன. அதனால் தான் தோல்வியின் முகத்தை பார்க்க வேண்டியிருந்தது. இது தவிர, கட்சியின் மத்திய தலைமையும் டெல்லி தேர்தலில் அதிக அக்கறை காட்டவில்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News