முன்னாள் ஜே.என்.யு.எஸ்.யூ மாணவர் கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கைத் தொடர டெல்லி அரசு அனுமதி

இடதுசாரி மற்றும் முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவருமான கன்னையா குமார் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குத் தொடர தில்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2020, 10:00 PM IST
முன்னாள் ஜே.என்.யு.எஸ்.யூ மாணவர் கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கைத் தொடர டெல்லி அரசு அனுமதி title=

புது டெல்லி: 2016 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக கன்னையா குமார் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை தொடர முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு முன்பு தில்லி காவல்துறையினரிடம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து டெல்லி அரசு முன்கூட்டியே அனுமதி வழங்கியுள்ளது. 

ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்களிடம் கோப்பு நிலுவையில் இருந்தது. ஏனென்றால் அவர் தான் உள்துறை துறை அமைச்சராக உள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சரின் அலுவலகத்தில் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், இந்த முடிவை உள்துறை துறை தரப்பு மட்டுமே எடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இறுதியாக, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர், உள்துறை துறை நிர்வாகம் வழக்கு தொடர அனுமதி அளித்தது என்றார் அந்த அதிகாரி. மேலும் இதுக்குறித்து சட்டக் குழு முடிவெடுப்பதில் எந்தத் தலையீடும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

"சட்டக் குழு முடிவெடுப்பதில் முதல்வர் அலுவலகம் அல்லது வேறு எந்தத் துறையும் தலையிடாது" என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். 

முன்னாள் ஜே.என்.யு.எஸ்.யு தலைவர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிற முன்னாள் மாணவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற கோப்பை தில்லி அரசு ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் வைத்திருந்தது.

குற்றவியல் நடைமுறைகளின் கீழ், தேசத்துரோக வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யும் போது, விசாரணை முகவர் மாநில அரசின் ஒப்புதல் அல்லது அனுமதியை வாங்க வேண்டும் என்பது விதி. அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல் துறை, மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது.

2002 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து 2002 பிப்ரவரி 9 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் "தேச விரோத" கோஷங்களை எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

ஜனவரி 14, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்ட தில்லி காவல்துறை குற்றப்பத்திரிகையில், கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் ஏழு காஷ்மீர் மாணவர்கள் உட்பட 10 ஜே.என்.யூ மாணவர்களை முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளது. 

ஏறக்குறைய பதினொரு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 6, 2019 அன்று டெல்லி நீதிமன்றம், ஒரு நியாயமான காலக்கெடுவுடன் மூன்று மாதங்களளுக்குள் ஒரு முடிவை எடுக்குமாறு ஆம் ஆத்மி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதோடு, தாமதம் செய்வது சட்டம் விதிமுறையை மீறுவதற்கு வழிவகுக்கிறது என்பதைக் குறிப்பிட்டது.

ஆம் ஆத்மி அரசு சார்பில், கன்னையா குமார் மற்றும் ஒன்பது பேர் பேரணியில் ஆற்றிய உரைகளில் தேசத்திற்கு எதிரான கோஷங்கள் இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு அதிக நேரம் தேவை என்று டெல்லி அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியதுடன், ஒரு நிலையான ஆலோசனை பெற்று ஒரு மாதத்திற்குள் முடிவு செய்வதாகக் கூறியது. மேலும் டெல்லி காவல்துறை 2016 சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை "இரகசியமாகவும் அவசரமாகவும்" தாக்கல் செய்ததாகவும் டெல்லி அரசு குற்றம் சாட்டியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி, ஒரு மாதத்திற்குள் அனுமதி குறித்து முடிவெடுக்குமாறு தில்லி அரசிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது, மேலும் இந்த தாமதம் நீதித்துறை நேரத்தை வீணடிப்பதாக இருகிறது என்றும் கூறியது

Trending News