டெல்லி காற்று மாசு- பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை

டெல்லியில் அதிக அளவிற்கு காற்று மாசடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது. இந்நிலையில் டில்லியில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

Last Updated : Nov 6, 2016, 02:53 PM IST
டெல்லி காற்று மாசு- பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை title=

புதுடெல்லி: டெல்லியில் அதிக அளவிற்கு காற்று மாசடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது. இந்நிலையில் டில்லியில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த கூட்டத்திற்கு பின்னர் கெஜ்ரிவால் அளித்த பேட்டி:- நாளை முதல் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படும், அடுத்த 10 நாட்களுக்கு பதர்பூர் தாவர நிலையம் மூடப்படும், டில்லியில் மீண்டும் வாகன போக்குவரத்தில் ஒற்றை இலக்க பதிவெண் முறை கொண்டு வரப்படும், அடுத்த 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும், டில்லியில் அடுத்த 5 நாட்களுக்கு புதிய கட்டுமானங்கள் நடக்கவோ அல்லது கட்டட இடிபாடுகள் நடக்கவோ தடை விதிக்கப்படுகிறது, அடுத்த 10 நாட்களுக்கு டில்லியில் மின்சார ஜெனரேட்டர்களுக்கு தடை, குப்பை மேடுகளில் தீவைப்பது நிறுத்தி வைக்கப்படும், மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். வீட்டில் இருந்தாவாறு வேலை பார்க்க வேண்டும் என கெஜ்ரிவால் கூட்டத்திற்கு பின்னர் பேட்டியில் கூறியுள்ளார். 

Trending News