சுதந்திர தினம் 2018: டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2018, 07:16 AM IST
சுதந்திர தினம் 2018: டெல்லியில் பலத்த பாதுகாப்பு! title=

இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்நாளை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் டெல்லியில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன்காரணமாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Trending News