ஜாபர் சாதிக் விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை - சிக்கப்போவது யார்?

Jaffer Sadiq ED: சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது பணமோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2024, 07:58 PM IST
  • ஜாபர் சாதிக் நேற்று NCB அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
  • ஜாபர் சாதிக் மூலம் ரூ.7 லட்சத்தை மூத்த திமுக நிர்வாகி பெற்றுள்ளார் - NCB
  • கட்சிக்கு அவர் எந்த நிதியும் அளிக்கவில்லை - அமைச்சர் ரகுபதி
ஜாபர் சாதிக் விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை - சிக்கப்போவது யார்? title=

Jaffer Sadiq Enforcement Directorate: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 3500 கிலோ சூடோபீட்ரின் என்ற போதைப் பொருளை உருவாக்க உதவும் வேதிப்பொருள், கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கடந்த வாரம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சூடோபீட்ரினை வைத்திருந்த சிலரை கைது செய்தபோது, அவர்களுக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. 

ஜாபர் சாதிக் பல தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த மாதம் திரையரங்கில் வெளியாக உள்ள மங்கை திரைப்படமும் இவரின் தயாரிப்பில் உருவானதாகும். இவர் திமுகவின் சென்னை மேற்கு அயலக அணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். இவர் குறித்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அறிவித்த உடனேயே திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் இவரை நேற்று ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக கூறிய நிலையில், விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் கூறினர். தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பினால் வழக்கு - எம்பி வில்சன்

ஜாபர் சாதிக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி, பல்வேறு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்திருப்பதாகவும் NCB கூறியது. தொடர்ந்து, இவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள் பலருடன் தொடர்பிருப்பதாகவும், செல்வாக்கு மிகுந்த நபர்களுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும், அரசியல் ரீதியாக நிதிகளை வழங்கியிருப்பதாக NCB கூறியிருந்தது. 

மேலும், விரைவில் ஜாபர் சாதிக் மூலம் 7 லட்சம் ரூபாய் இரண்டு பரிவர்த்தனைகளாக மூத்த திமுக நிர்வாகிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த திமுக நிர்வாகியை அழைத்து விசாரிக்க விரைவில் சம்மன் அனுப்பப்படும் என NCB தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது பணமோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் மீது பல எப்ஐஆர்களும் பதியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அமலாக்கத்துறையால் பணமோசடி தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை ஜாபர் சாதிக் விவகாரத்தில் இறங்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

ஜாபர் சாதிக்கிடம் இருந்து 7 லட்ச ரூபாயை பெற்ற மூத்த திமுக நிர்வாகி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தினால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். மேலும், ஜாபர் சாதிக் கட்சிக்கு எவ்வித நிதியும் அளிக்கவில்லை என சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ரகுபதி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமானவர்கள்... பாஜக, அதிமுகவில் உள்ளனர் - அமைச்சர் ரகுபதி அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News