டாய்லட் கிளீன் பண்ணா இந்தியா போகலாம்: மாணவர்கள் கண்ணீர்!

கழிவறையை சுத்தம் செய்தால் இந்தியாவிற்கு போகலாம் என தூதரக அதிகாரிகள் கூறியதாக  உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2022, 02:55 PM IST
  • மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன அதிகாரிகள்.
  • எல்லையை தாண்ட பணம் வசூல்.
  • மாணவர்கள் கண்ணீருடன் பேட்டி.
டாய்லட் கிளீன் பண்ணா இந்தியா போகலாம்: மாணவர்கள் கண்ணீர்! title=

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது.  ஆனாலும், இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்க முடியவில்லை. உக்ரைனில் உள்ள போர் நடக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர். இதனிடையே, உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் ஒருவர் இந்திய தூதரக அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பீகாரில் உள்ள சஹர்சாவில் வசிக்கும் பிரதீபா வினிஸ்டியா, "ருமேனியா மக்கள் எங்களுக்கு நிறைய உதவினார்கள், தங்குவதற்கு இடம் கொடுத்தார்கள், எங்களுக்கு வயிறு முழுக்க உணவளித்தனர். 

ukraine

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

ஆனால் ருமேனியாவில் இந்திய தூதரகத்தினர் எங்களை மிகவும் கேவலமாக நடத்தினர். கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்களோ, அவரை முதலில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வோம், பின்னர் மற்றவர்களை அழைத்துச் செல்வோம் என்று எங்களுக்குத் தெரிவித்தார்.  ருமேனியா எல்லைக்குச் செல்ல மாணவர்கள் தாங்களாகவே முன்முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. பஸ்காரர்கள் எல்லைக்கு செல்ல ஒரு மாணவரிடம் 6,000 ரூபாய் வசூலித்தனர். இதில் ஏஜெண்டுகள் மற்றும் தூதரக உறுப்பினர்கள் இருவருமே சம்பந்தப்பட்டிருப்பதாக மாணவி சந்தேகம் எழுப்பினார். பிரதீபா மேலும் கூறுகையில், "14 மணி நேரப் பேருந்து பயணத்திற்குப் பிறகு, ருமேனியா எல்லையை அடைந்தோம். 

 

மாணவர்கள் மிகவும் சோர்வாக இருந்ததால், குளியலறையை சுத்தம் செய்ய யாருக்கும் சக்தி இல்லை, ஆனால் சில மாணவர்கள் விரைவில் இந்தியா செல்ல விரும்பினர். வீட்டுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், சில மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தனர்.  மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவியான பிரதிபா கூறுகையில், முதலில் தூதரக ஆட்கள் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை. இதன் பின்னர் எங்களுடைய நண்பர் ஒருவர் முகநூலில் ஒரு காணொளியை வெளியிட்டு உண்மை நிலையை வெளிப்படுத்திய போது, ​​உடனடியாக தூதரகத்திலிருந்து அழைப்பு வந்து வீடியோவை நீக்குமாறு அழுத்தம் கொடுத்தனர் என்று கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதலுக்கு பதிலளித்த அமெரிக்கா: அடுத்த கட்டம் ஆரம்பமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News