Farmers Protest: MSP தொடரும் என எழுதி கொடுக்க தயார் - வேளாண் இணை அமைச்சர்

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2020, 03:44 PM IST
  • தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
  • புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்குய் அதிகாரம் அளிக்கின்றன.
  • விவசாயிகள் நாட்டில் அமைதியினமையை ஏற்படுத்தும் வகையிலான எந்த விதமான முடிவையும் எடுக்க மாட்டார்கள் என வேளாண் இணையமைச்சர் நம்பிக்கை
Farmers Protest: MSP தொடரும் என எழுதி கொடுக்க தயார் - வேளாண் இணை அமைச்சர் title=

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன்  பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 

விவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும்.

இந்த நிலையில், வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, , குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும் என எழுதி கொடுக்க தயார் என  கூறியுள்ளார். மேலும் எதிர்கட்சிகள் அரசில இலாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டி விடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

தங்கள் சொந்த லாபத்திற்காக செயல்படும் அரசியவாதிகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

ALSO READ | கனடா தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தலைமை மீதும் விவசாயிகள் மீதும் தனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது எனக் கூறிய அவர், விவசாயிகள் நாட்டில் அமைதியினமையை ஏற்படுத்தும் வகையிலான எந்த விதமான முடிவையும் எடுக்க மாட்டார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்குய் அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற சுதந்திரத்தை அளிக்கிறது என்றும், வயலில் வேலை செய்யும் உண்மையான விவசாயிகள் இதனை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

'டில்லி சாலோ' என்னும் விவசாயிகள் போராட்டத்தின் (Farmers Protest) ஒரு பகுதியாக, விவசாயிகள் தற்போது தேசிய தலைநகரான  தில்லியின் (Delhi) எல்லை பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதினோராவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ | விவசாயிகள் போராட்டம்: பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை; நீடிக்கும் போராட்டம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News