நாட்டின் வளர்ச்சி விகிதம் அமெரிக்க, சீனாவை மிஞ்சும்; GST எளிதாக்கப்படும்: நிதியமைச்சர்

நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட சிறந்ததாக இருக்கிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 23, 2019, 07:00 PM IST
நாட்டின் வளர்ச்சி விகிதம் அமெரிக்க, சீனாவை மிஞ்சும்; GST எளிதாக்கப்படும்: நிதியமைச்சர் title=

புதுடில்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். அப்பொழுது அவர், 2019ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடும். ஆனால் இப்போது கூட நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட சிறந்ததாக இருக்கிறது எனத் தெரிவித்தார். 

டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றி வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது, 

அமெரிக்க மற்றும் சீனா இடையே ஏற்ப்பட்டு வரும் வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட சிறந்ததாக இருக்கும்.

2019ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடும்.

ஜி.எஸ்.டி வரி மேலும் எளிமையாக்கப்படும். முதலீட்டாளர்களின் நலன்தான் முக்கியம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதுதான் எங்களின் முதன்மை மற்றும் முக்கிய பணி ஆகும்.

பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் நீக்கப்படும். CSR விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது. சிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடு மற்றும் வாகன கடன் வடிகள் குறையும்.

ஹவுசிங் பைனான்ஸ் கம்பனிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. MSME இன் அனைத்து ஜிஎஸ்டி பணமும் 60 நாட்களில் திருப்பித் தரப்பட வேண்டும்.

மறுமூலதனத்துக்காக கூடுதளாக 70 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக அரசு வங்கிகளுக்கு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வீடுகள் வாகனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வாங்குவதை அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது  தேசிய வீட்டு வசதி வங்கி பிற வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இதுவரை மொத்தம் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகளில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் வாங்கப்படும் பிஎஸ்-4  வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட முழு கால அளவிற்கும் செயல்பட அனுமதிக்கப்படும்.

Trending News