மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ANI | Updated: Sep 12, 2017, 02:45 PM IST
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

மணிப்பூரின் காமோசோங் மாவட்டத்தில் உள்ள மாக்கான் என்னும் பகுதியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி.என்- ஐ.எம்) மற்றும் பி.எல்.ஏ -க்கு இடையில் ஆயுத பரிமாற்றத்தின் போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் தடை செய்யப்பட்ட மக்கள் சுதந்திர இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சுமார் 5.30 மணியளவில் இந்தோ-மியன்மார் சர்வதேச எல்லைக்கு அருகே, காம்மோ குல்லென் பொலிஸ் நிலையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் நடைபெற்றுள்ளது.

(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)