ஹரியாணா தீ-விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் ஏற்பட்ட தீ-விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last Updated : Feb 9, 2019, 09:16 PM IST
ஹரியாணா தீ-விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! title=

ஹிசார்: ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் ஏற்பட்ட தீ-விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளி அன்று இரவு நடைப்பெற்ற இச்சம்பவமானது, உக்லானாவில் இருந்து சுமார் 40 கிமி தொலைவில் உள்ள தானி பஹரியேன் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உக்லானா காவல் நிலைய சராங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை, எனினும் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இரவில் உரங்கிக்கொண்டிருந்த போது தீ பிடித்ததாகவும், வீட்டின் உரிமையாளர் தீ பிடித்ததை அறிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை காப்பாற்ற முயன்றதாக தெரிகிறது.

காவல்துறை அறிக்கையின் படி இந்த விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் முறையே... சுரேஷ் மற்றும் அவரது மனைவி சுமான்(38), மகள்கள் நிஷா (14), நிரன்ஜனா (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை காப்பாற்ற முயன்ற அன்சு, சேத்தன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News