4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

Four States Assembly Election 2024 Date Announced Tamil : ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2024, 05:10 PM IST
  • ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது.
  • ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
  • ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு - முழு விவரம் title=

Four States Assembly Election 2024 Date Announced Tamil : 18ஆவது மக்களவை தேர்தலுக்கான முழு அட்டவணையும் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

இந்த சந்திப்பில், மக்களவை தேர்தல் அட்டவணை மட்டுமின்றி, நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை மற்றும் பல்வேறு மாநிலங்களின் 26 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

மக்களவை தேர்தலின் முதல் கட்டம் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 26ஆம் தேதியும்,  மூன்றாவது கட்டம் மே 7ஆம் தேதியும், நான்காவது கட்டம் மே 13ஆம் தேதியும், ஐந்தாவது கட்டம் மே 20ஆம் தேதியும், ஆறாவது கட்டம் மே 25ஆம் தேதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், மக்களவை தேர்தல்களும், 26 தொகுதிகளின் தேர்தல்களும் இந்த 7 தேதிகளில் நடைபெற உள்ளன.

வரும் ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் மட்டுமின்றி நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மற்றும் 26 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Zee News கருத்துக்கணிப்பு: தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்கள்...? பாஜகவுக்கு வாய்ப்பிருக்கா?

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. அருணாச்சலம் பிரேதசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சிக்கிமிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 

ஒடிசாவில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி அங்கு முதல் கட்டமாகவும், மே 20ஆம் தேதி அங்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி மொத்தமாக நடைபெறுகிறது.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்கள்?

கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 

ஒடிசா , மத்திய பிரசேதம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நான்கு கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மீதம் உள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், ஜூன் 6ஆம் தேதி வரை விதிகள் அமலில் இருக்கும்.

மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News