அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி; 5.29 சதவீதம் குறைவு

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி எனவும், அதில் ரூ.17,582 கோடி மத்திய அரசுக்கும், ரூ.23,674 கோடி மாநில அரசுக்கும் ஆகும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2019, 05:47 PM IST
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி; 5.29 சதவீதம் குறைவு title=

புதுடெல்லி: பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) வசூல் 5.29 சதவீதம் குறைந்து 2019 அக்டோபர் மாதத்தில் ரூ.95,380 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.91,916 கோடியை விட அதிகம் வசூலாகி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வரியில் ரூ.1 லட்சம் கோடி குறைவாக தற்போது வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தை விட அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 5.29 சதவீதம் குறைந்துள்ள போதிலும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் இது 6.74 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.17,582 கோடியும், மாநில ஜிஎஸ்டி (State Goods and Service Tax) ரூ.23,674 கோடியும் ஆகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (Central Goods and Service Tax) ரூ.46,517 கோடி (இறக்குமதி வரி ரூ.21,446 கோடி உட்பட) ஆகும். அதேபோல செஸ் கூடுதல் வரி ரூ.7,607 கோடி (இறக்குமதி வரி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.774 கோடி உட்பட) வசூல் ஆகியுள்ளது.

செப்டம்பர் முதல் அக்டோபர் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டிஆர் (GSTR) 3பி ரிட்டர்ன்ஸ் ரூ.73.83 லட்சமாகும்.

Trending News