ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு!

ஜிஎஸ்டி வரி கணக்கைக் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்க ஜிஎஸ்டி அமலாக்கக் குழு முடிவு செய்துள்ளது.

Last Updated : Aug 20, 2017, 09:28 AM IST
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு! title=

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசத்தை வரும் 25-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:-

கடந்த 5-ம் தேதி ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஜிஎஸ்டி இணையதளத்தைத் தொடர்பு கொண்டதால், அந்த இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், வரி செலுத்துவோருக்கு சிரமம் நேரிட்டது.

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சில வடமாநிலங்களும், ஜம்மு-காஷ்மீர் மாநிலமும், வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி கணக்கைக் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்க ஜிஎஸ்டி அமலாக்கக் குழு முடிவு செய்துள்ளது.

Trending News