குஜராத்தில் வெள்ளம்: 25000 பேர் மீட்பு

Last Updated : Jul 25, 2017, 09:40 AM IST
குஜராத்தில் வெள்ளம்: 25000 பேர் மீட்பு title=

குஜராத்தின் பல இடங்களில் வெள்ளத்தின் காரணத்தால் 25000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குஜராத்தில் கடும் மழை பெய்து வந்ததால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

மாநிலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை அளவில் 56.61% மழை பதிவாகியுள்ளது. வெள்ளத்தில் பனஸ்கந்தா பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த 10,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இங்குள்ள 339 பெரிய மற்றும் சிறிய சாலைகள், ஒரு தேசிய நெடுங்சாலை 30 மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 218 கிராம சாலைகள் ஆகியவை வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு,14 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும் 6 படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. விமானப்படை ஹெலிகாப்டர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending News