ஏழு பேருடன் வானில் பறந்த ஹெலிகாப்டர் மாயம்!

வானில் ஏழு பேருடன் பறந்த ஹெலிகாப்டர் மாயமானதாக தகவல்.

Updated: Jan 13, 2018, 03:29 PM IST
ஏழு பேருடன் வானில் பறந்த ஹெலிகாப்டர் மாயம்!
ZeeNewsTamil

மகாராஷ்டிராவில் ஜுஹு விமான நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் 5 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை புறப்பட்டு சென்றது.

அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் நிறுவனத்தின் விமான கட்டுப்பாட்டு அறையுடன் காலை 10.30 மணிவரை தொடர்பில் இருந்தது.  அதன்பின் அவர்கள் எந்த தொடர்பிலும் இல்லை.  இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையினருக்கு எண்ணெய் நிறுவனம் தகவல் தெரிவித்தது.  அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியை தொடங்க உள்ளனர்.