இமாச்சல பிரதேசம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது!

Updated: Oct 12, 2017, 05:11 PM IST
இமாச்சல பிரதேசம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது!

நவம்பர் 9-ஆம் தேதி இமாச்சலப்பிரதேச தேர்தல் நடைபெறும், பின்னர் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும் குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாகவும், ஹிமாச்சலத் தேர்தல் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பேரவை ஜனவரி 7, 2018-ஆம் தேதி முடிவடைவது. இந்நிலையில் இமாச்சலப் பேரவையின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளதாவது.

நவம்பர் 9-ஆம் தேதி இமாச்சலப்பிரதேச தேர்தல் நடைபெறும், பின்னர் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் எனவும் குஜராத் சட்டபேரவை தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close