துவாரகா... கடலுக்கடியில் பிரதமர் மோடி செய்த பூஜை... உங்களுக்கும் செல்ல ஆசையா..!

குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஆழ்கடலில் டைவ் அடித்து தரை பகுதிக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து  வழிபட்டது தமக்கு பரவச அனுபவத்தை, கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2024, 08:57 AM IST
துவாரகா... கடலுக்கடியில் பிரதமர் மோடி செய்த பூஜை...  உங்களுக்கும் செல்ல ஆசையா..! title=

குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஆழ்கடலில் டைவ் அடித்து தரை பகுதிக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து  வழிபட்டது தமக்கு பரவச அனுபவத்தை, கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் அரபிக் கடலில் அமைந்த ஆன்மிக தளமான துவாரகாவிற்கும், பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில், காலப்போக்கில் அரபிக் கடலுக்குள் துவாரகை நகரம் மூழ்கியதாக கூறப்படுகிறது.

துவாரகா நகரம் மூழ்கியது தொடர்பாக பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தப் பழமையான நகரம் மூழ்கியது தொடர்பான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை அடுத்து இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் துவாரகைக்கு, கடலில் ஸ்கூபா டிரைவிங் மூலம், சென்று வழிபட்டார்.

துவாரகா நகருக்கு செல்வது எப்படி

குஜராத் மாநிலத்தின் முகமண்டல் தீபகற்பத்தின் மேற்கு கரையில் உள்ள கோமதி ஆற்றின் வலது கரையில், காட்சி வளைகுடாவின் முகப்பில், அரபிக் கடலில் அமைந்துள்ளது. துவாரகா நகருக்கு, விமான மார்க்கமாகவும், ரயில் மற்றும் சாலை மார்க்கமாகவும் செல்லலாம். முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள துவாரகா நகரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஜாம்நகர் விமான நிலையம்.

துவாரகாவில் உள்ள ஸ்கூபா டைவிங்

துவாரகா கடற்கரையில், பெட் துவாரகா என்ற தீவுக்கு அருகில், ஸ்கூபா டிரைவிங் நடத்தப்படுகிறது. ஸ்கூபா டைவிங் மூலம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், கண்டெடுக்கப்பட்ட, துவாரகா நகரின் எச்சங்களை நீருக்கடியில் மக்கள் காணலாம். கடலோரத்தில் பறந்து விரிந்திருக்கும் அழகிய பவளப்பாறைகள், அற்புதமான அனுபவத்தை தரும். இங்கே கடல் நீர் மிகவும் தெளிவாக இருப்பதால், கடல் உயிரினங்களான, ஆக்டோபாஸ்கள், நட்சத்திர மீன்கள், டால்பின்கள் ஆமைகள், என அனைத்தையும் கண்டுபிடிக்கலாம்.

மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!

இவை அனைத்தையும் அனுபவிக்க மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று சிவராஜ் போர் கடற்கரை. பொழுது போக்குவரத்து மூலம் இந்த பகுதியை எளிதாக அணுகலாம். கடற்கரைக்கு அருகில் உள்ள ரயில் நிலையம், துவாரகா ரயில் நிலையம். கடற்கரைக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஜாம்நகர் விமான நிலையம். இந்த கடற்கரை மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் சாலைகள் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே மிக எளிதாக எல்லா இடத்திற்கும் செல்லலாம்.

பிரதமர் மோடி, ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன், கடலுக்குள் பயணித்து, கடலுக்கு அடியில் சென்று பகவான் கிருஷ்ணருக்கு மயிலிறகை அர்ப்பணித்து வழிபட்டார். பிரதமர் மோடி ஸகூபா டிரைவிங் கருவிகளை உடலில் பொருத்திக்கொண்டு, கடலுக்குள் சென்று, துவாரகையில் வழிபட்ட வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். இது தொடர்பான போட்டோக்கள் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

துவாரகா நகரம் கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நகரமாக கூறப்படுகிறது.  மாமனான கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு, துவாரகையின் மன்னனாக முடி சூடிய கிருஷ்ண பகவான், வைகுண்டத்திற்கு திரும்புவதாக முடிவு செய்யும் வரை துவாரகை நகரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணர். துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியதகா புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | மத்திய நிதி அமைச்சரை ஜாதி ரீதியாக இழிவுப்படுத்தும் திமுக - வானதி ஸ்ரீனிவாசன் அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News